EThanthi - முதல் முறையாக பொது மீடியாவில் தலைகாட்டிய குமரிமுத்து மகள் !

Flash News

முதல் முறையாக பொது மீடியாவில் தலைகாட்டிய குமரிமுத்து மகள் !

தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் குமரிமுத்து. இதுவரை ஏராளாமான படங்கள் நடித்துள்ள இவர் இன்று வரை மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் என்றே கூறலாம்.
பொது மீடியாவில் தலைகாட்டிய குமரிமுத்து மகள்
குறிப்பாக இவரது நடிப்பைவிட இவரது சிரிப்பு தான் இவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்றே கூறலாம். 

அந்த அளவிற்கு மிகவும் வித்தியாசமாக சிரிக்கக் கூடியவர் நடிகர் குமரிமுத்து. சினிமாவில் பிரபலமாக இருந்த இவரை பற்றி நாம் அதிகம் அறிந்திருப்போம். 
ஆனால், இதுவரை இவரது குடும்பத்தை பற்றியோ அல்லது பிள்ளைகள் பற்றியோ எந்த தகவல்களும் வெளியுலகத்திற்கு தெரியவில்லை. இந்நிலையில், குமரிமுத்து மகளாகிய எனது பெயர் எலிசபெத். 

இதுவரை நான் பொது மீடியாவுக்கு வந்ததில்லை, முதல் முறையாக வந்து சில தகவல்களை பகிர்ர்த்துக் கொள்ள விரும்புகிறேன் என வீடியோ ஒன்றை வெளி யிட்டுள்ளார் நடிகர் குமரிமுத்துவின் மகள் எலிசபெத்.

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், எல்லோருக்கும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அந்த ஆசை எல்லோருக்கும் நிறைவேறுவதில்லை. 
குமரிமுத்து மகள்
ஆனால் எல்லோரும் வெற்றி பெறலாம் அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை என்னுடைய அனுபவங்கள் மற்றும் என்னுடைய தந்தையின் அனுபவங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என ஆரம்பித்துள்ளார்.

மேலும் பேசும் அவர், நம் வாழ்கையையில் வெற்றிபெற நாம் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியது அமைதி. 
எந்த அளவிற்கு நாம் வாழ்க்கையில் அமைதியாக இருக்கின்றோமோ, அமைதியை கடைப் பிடிக்கின்றோமோ, அந்த அளவிற்கு நாம் வெற்றி பெறலாம் என எலிசபெத் குமரிமுத்து அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
முதல் முறையாக பொது மீடியாவில் தலைகாட்டிய குமரிமுத்து மகள் ! முதல் முறையாக பொது மீடியாவில் தலைகாட்டிய குமரிமுத்து மகள் ! Reviewed by EThanthi.in on July 13, 2020 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close