அசத்தும் வித்யாபாலன் - சில்க் ஸ்மிதா டூ சகுந்தலாதேவி !
ஒரு திறமையான நடிகை என்றால் எந்தவிதமான கதா பாத்திரங்க ளிலும் நடித்துப் பெயர் வாங்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நடிகையாக இந்தியத் திரை யுலகில் தற்போது இருக்கும் ஒரு நடிகை வித்யா பாலன்.
பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் படம் நடிக்க ஒப்பந்தமாகி சில நாட்கள் நடித்த பின் தயாரிப்பாளரால் வேண்டாம் என்று நிராகரிக்கப் பட்டவர்.
அதன் பிறகு ஹிந்தித் திரையுல கத்திற்குச் சென்று அங்கு பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
தமிழ்த் திரை யுலகத்தில் 80களில் கவர்ச்சி நடிகையாக விளங்கிய சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்தற்குப் பிறகு இன்னும் அதிகமாக கவனிக்கப் பட்டவர்.
தமிழ்த் திரை யுலகத்தில் 80களில் கவர்ச்சி நடிகையாக விளங்கிய சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்தற்குப் பிறகு இன்னும் அதிகமாக கவனிக்கப் பட்டவர்.
பின் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு விதமான சிறப்பான கதா பாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
இப்போது கணித மேதையான 'சகுந்தலா தேவி' பயோபிக்கில் இன்று(செப்.,16) முதல் நடிக்கிறார் வித்யாபாலன்.
இப்போது கணித மேதையான 'சகுந்தலா தேவி' பயோபிக்கில் இன்று(செப்.,16) முதல் நடிக்கிறார் வித்யாபாலன்.
இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப் பட்டது. சகுந்தலா தேவியின் நிஜ உருவம் போலவே வித்யாவின் தோற்றமும் படத்தில் இருப்பது பலரையும் ஆச்சரியப் படுத்தி உள்ளது.
இப்படத்தை அனு மேனன் என்ற பெண் இயக்குனர் இயக்குகிறார்.

No comments