நைட்டிங்கேல் எனப்படும் பிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி !
இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் பிரபலப் பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத் திணறல் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
லதா மங்கேஷ்கர் இந்தி மொழியில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தனது 90-வது பிறந்த நாளை லதா கொண்டாடினார்.
கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தனது 90-வது பிறந்த நாளை லதா கொண்டாடினார்.
இந்நிலையில், மூச்சுத் திணறல் காரணமாக நேற்று அதிகாலை 2 மணியளவில் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
லதா மங்கேஷ்கர் 36 இந்திய மொழிகளிலும், சில வெளிநாட்டும் மொழிகளிலும் சுமார் 30 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார்.
பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகள் பெற்ற இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப் பட்டுள்ளது.



No comments