EThanthi - ஆடைக்கு ஏற்ற ஐப்ரோ ஷேப்? நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல் !

Flash News

ஆடைக்கு ஏற்ற ஐப்ரோ ஷேப்? நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல் !

முகத்தில் எப்போதும் சட்டென கவனிக்கக் கூடிய விஷயம் புருவங்கள். சிலருக்கு புருவங்களில் முடிகள் குறைவாக இருக்கலாம். இல்லையேல் ஷேப் சரி யில்லாமல் போகலாம். 
ஆடைக்கு ஏற்ற ஐப்ரோ ஷேப்?
அவர்களுக் கெல்லாம் இந்த ஐபுரோ ஷேப் கிட்டுகள் தான் உதவுகின்றன.

குறிப்பாக சினிமா நடிகைகள் பலர் இந்த புருவ ஒப்பனையில் தான் முக வித்யாசங் களைக் காட்டி வருகின்றனர்.

நாம் செய்யும் ஒப்பனை எல்லா விதமான நிகழ்ச்சிகளு க்கும், ஆடைகளு க்கும் ஏற்புடைய தாக இருக்குமா என்றாலும் நிச்சயம் இல்லை. 

எனவே எந்தெந்த நிகழ்சிகளுக்கு ஆடைகளுக்கு என்ன மாதிரியான ஷேப்புகள் சிறந்தவை யாக இருக்கும் என டிரெண்ட் செட்டர் நயன்தாரா வின் புருவ ஒப்பனைகளை வைத்துப் பார்ப்போம்.

சாஃப்ட் ஆங்கில் ஷேப் அல்லது ஆர்ச்ட் (arched) :

ராஜா ராணி படத்தில் நயன்தாரா மூன்று வகைகளில் தன் புருவத்தை வித்தியாசப் படுத்தி யிருப்பார். 
சாஃப்ட் ஆங்கில் ஷேப் அல்லது ஆர்ச்ட்
குறிப்பாக புடவையில் தோன்றும் காட்சிகளில் அமைதியான மற்றும் பொறுப்பான பெண் தோற்றத்தை ஏற்படுத்த புருவங்களை சாஃப்ட் ஆங்கல் ஷேப்பை அதிகமாக பயன்படுத்துவார்ர். 

இது கூடுதலாக ஸ்டைலிஷான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. அடுத்தாக வட்ட வடிவ ஷேப் பயன்படுத்துகிறார். பட்டையில் நேச்சுரல் அகலத்தையே அளிக்கிறார். 

புடவை அணிந்து செல்வோர் இந்த ஷேப்புகளை முயற்சி செய்து பார்க்கலாம். முக்கியமாக இந்த ஷேப் வரையும் போது வைக்கும் பொட்டு மீடியம் அளவில் இருக்க வேண்டும்.

சிம்பில் மேக்கப் தேர்வு செய்யும் போது இந்த ஷேப் தான் நயன்தாரா பல படங்களில் பயன்படுத்தி யிருக்கிறார். டிரெண்ட் செட்டராக பிரபலமா வதற்கு முன்னரும் இந்த ஸ்டைல் தான் பாலோ செய்திருக்கிறார்.

ரவுண்டட் திக் ஷேப் :

கம்பீர முக அமைப்பை அளிக்கக் கூடிய தோற்றத்திற்கு புருவங்களை அடர்த்தியாக பட்டைத் தீட்டுகிறார். 
ரவுண்டட் திக் ஷேப்
உதாரணமாக இருமுகன், காஷ்மோரா, புதிய நியமம் என அல்டிமேட் போல்டான தோற்றத்திற்கு ரவுண்டட் ஷேப்பில்

அதிக பட்டை தீட்டி டெயில் என சொல்லப்படும், புருவங்களின் முனைப் பகுதியில் மட்டும் மெல்லிய தாக வரைகிறார்.

அது மட்டுமன்றி புருவங்களை சரியாக, கண்ணிற்கு இணையான நீளத்தில் இருந்து ஆரம்பித்து கண்கள் முடியும் இடம் வரை மட்டுமே நீட்டி யிருக்கிறார். இது தான் இந்த ஷேப்பின் ட்ரிக்ஸ் எனலாம்.

பொதுவாகவே மற்ற நிகழ்ச்சிகளு க்குச் செல்லும் போதும் நயன்தாரா இந்த ஐப்ரோ ஸ்டைலைதான் பின்பற்றுகின்றார். 

முக்கியமாக லூஸ் ஹேர் ஸ்டைல் விடும் போதும், கொண்டை போடும் போதும், பெரிய பொட்டு, ஸ்டேட்மெண்ட் நகை அணியும் போதும் இந்த ஐப்ரோ ஸ்டைல் தான் அவரின் சாய்ஸாக இருக்கிறது.

அவரின் சமீபகால யுனிக் ஸ்டைல் இது என்றும் கூறலாம். நீங்களும் உங்களை கம்பீரமான தோற்றத்தை அளிக்க நினைத்தால் இந்த ஷேப் சிறந்தது.

ஸ்டிரெய்ட் ஷேப் :
ஸ்டிரெய்ட் ஷேப்
ஹோம்லியான தோற்றத்தை அளிக்கக் கூடிய மேக்கப்புகளில் நயன்தாரா எப்போதுமே டல் மேக்கப் தான் அப்ளை செய்வார். காதில் கம்மல், நெற்றியில் பொட்டு என எல்லாமே சிறிய தாக இருக்கும். 

இதற்கு ஏற்ற புருவ அமைப்பாக ஸ்டிரெய்ட் ஷேப்பை பயன்படுத்துகிறார். அது மட்டுமன்றி நயன்தாரா வின் யூனிக் ஹேர் ஸ்டைலான பஃப் வைக்கும் போதும் மெல்லிய ஸ்டிரெய்ட் ஷேப் தான் பயன்படுத்துகிறார். 

அடுத்த முறை நீங்களும் இதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஆடைக்கு ஏற்ற ஐப்ரோ ஷேப்? நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல் ! ஆடைக்கு ஏற்ற ஐப்ரோ ஷேப்? நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல் ! Reviewed by EThanthi.in on December 17, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close