EThanthi - வெளியான தர்பார் ட்ரெய்லர் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !

Flash News

வெளியான தர்பார் ட்ரெய்லர் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'தர்பார்' ட்ரெய்லர் வெளியானதை, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. 
வெளியான தர்பார் ட்ரெய்லர்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. 

இந்தப் படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 16-ம் தேதி மாலை 6:30 மணியளவில் வெளியாகும் என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து இன்று (டிசம்பர் 16) மாலை 6 மணியிலிருந்தே 'தர்பார்' ட்ரெய்லர் எப்படி யிருக்கும் என்ற எதிர்பார்ப்பு சமூகவலை தளத்தில் உண்டானது. 

ஆனால், மும்பையில் 'தர்பார்' படத்தின் இந்தி ட்ரெய்லர் விழா தொடங்க தாமதமானது. இதனால் இணையத்தில் 6:30 மணியளவில் ட்ரெய்லர் வெளியாக வில்லை. 

இதனால் ரசிகர்கள் மத்தியில் கிண்டலுக்கு ஆளானது லைகா நிறுவனம். மாலை 7 மணியளவில் தான் ட்ரெய்லர் வெளியிடப் பட்டது. 

அதில் இடம் பெற்றுள்ள வசனங்களான 'I AM A BAD COP', ’என்ன பாக்குற ஒரிஜினாலாவே நான் வில்லன்மா... இது எப்டி இருக்கு’ ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

மேலும், திரையுலகப் பிரபலங்கள் பலரும் 'தர்பார்' ட்ரெய்லர் வெளியீட்டுக்கு தங்களது வாழ்த்து களைத் தெரிவித்து வருகிறார்கள். 

இதில் இளமையான வேடத்தில் ரஜினி நடித்திருப்பதால், பலரும் ட்ரெய்லரில் உள்ள காட்சிகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து 'இவருக்கு வயதாகி விட்டதா' என்ற கருத்துகளுடன் வெளியிட்டு வருகிறார்கள். 

பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருவதால் ''#DarbarTrailer என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட்டாகி வருவது குறிப்பிடத் தக்கது. 

இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத் துள்ளார்.

வெளியான தர்பார் ட்ரெய்லர் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ! வெளியான தர்பார் ட்ரெய்லர் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ! Reviewed by EThanthi.in on December 16, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close