EThanthi - தர்பார் படத்தின் ட்ரெய்லர் தேதி அறிவிப்பு - குஷியில் ரசிகர்கள் !

Flash News

தர்பார் படத்தின் ட்ரெய்லர் தேதி அறிவிப்பு - குஷியில் ரசிகர்கள் !

ரஜினிகாந்த் நடிப்பில் - ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். ரஜினிகாந்தின் 167-வது திரைப்படமாக உருவாகி யுள்ள இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 
தர்பார் படத்தின் ட்ரெய்லர் தேதி அறிவிப்பு
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரி யாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார்.

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ம் தேதி படம் வெளியாகிறது. 

இதனிடையே படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 

படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் ட்ரெய்லர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதியன்று வெளியாகும் என்று எதிர் பார்க்கப்பட்டது. 

ஆனால் அதுகுறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாக வில்லை. 

இந்நிலையில் தர்பார் படத்தின் ட்ரெய்லர் நாளை (16.12.2019) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது.
தர்பார் படத்தின் ட்ரெய்லர் தேதி அறிவிப்பு - குஷியில் ரசிகர்கள் ! தர்பார் படத்தின் ட்ரெய்லர் தேதி அறிவிப்பு - குஷியில் ரசிகர்கள் ! Reviewed by EThanthi.in on December 15, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close