EThanthi - தர்பார் ஷூட்டிங்கிற்கு ரஜினி வந்த கார் எது தெரியுமா?

Flash News

தர்பார் ஷூட்டிங்கிற்கு ரஜினி வந்த கார் எது தெரியுமா?

ரஜினிகாந்தின் தர்பார் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ரஜினியை புகழ்ந்து பேசினார்.
ரஜினி வந்த கார் எது தெரியுமா?

சுனில் ஷெட்டி பேசியதாவது,

ரஜினியை பார்க்கும் முன்பு டென்ஷனாக இருந்தது. ஆனால் அவரை பார்த்த பிறகு அமைதியாகி விட்டேன்.

ரஜினி அவ்வளவு எளிமைானவர். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். 

நான் அவரை போன்று ஒரு எளிமையான, நேர்மையான மனிதரை பார்த்தது இல்லை.

அவர் ஒரு லெஜண்ட். நான் ரஜினியை பார்க்கும் போது கடவுள் போன்றவரை பார்க்கிறேன். ஒரு ஸ்டண்ட் காட்சியில் நடித்து முடித்ததும் அவர் என்னை பாராட்டுவார்.

ஃபைட்டர்கள் கூட என்னை இந்த அளவுக்கு ஜாக்கிரதை யாக கையாள வில்லை என்பார். நான் வசனம் பேசும்போது அவர் கிளாப் பண்ணுவார்.

இது எல்லாம் நிஜமா என்று என்னை நானே கிள்ளிப் பார்க்க வேண்டி யிருந்தது. அவர் படப்பிடிப்புக்கு தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்த டாக்சியில் தான் வந்தார். 

அவர் ரேஞ்ச் ரோவரிலோ, பென்ஸ் காரிலோ வரவில்லை. அவர் சத்தம் இல்லாமல் செட்டில் அமர்ந்து சாப்பிடுவார். 

அதை பார்க்கும் போது எவ்வளவு பெரிய ஆள் இப்படி சிம்பிளாக இருக்கிறாரே என்று தோன்றும். கடவுளின் ஆசியால் தான் ரஜினி சார் இந்த இடத்தில் உள்ளார் என்றார்.
தர்பார் ஷூட்டிங்கிற்கு ரஜினி வந்த கார் எது தெரியுமா? தர்பார் ஷூட்டிங்கிற்கு ரஜினி வந்த கார் எது தெரியுமா? Reviewed by EThanthi.in on December 19, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close