EThanthi - போலீஸை தாக்கிய பிரபல நடிகையின் சகோதரர் கைது !

Flash News

போலீஸை தாக்கிய பிரபல நடிகையின் சகோதரர் கைது !

இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கியதாக பிரபல நடிகையின் சகோதரர் கைது செய்யப் பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் பாபிலோனா. 
போலீஸை தாக்கிய நடிகையின் சகோதரர் கைது
தை பொறந்தாச்சு, உன்னைக் கொடு என்னைத் தருவேன், என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்த இவருக்கு ரசிகர்கள் ஏராளம். 

சென்னை சாலிகிராமம் புஷ்பா காலனியில் வசிக்கும் இவரது தம்பி விக்கி என்கிற விக்னேஷ் குமார் வசித்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று இரவு விருகம்பாக்கம் போலீஸ் உதவி ஆய்வாளர் பழனி, காவலர் சங்கர் ஆகியோர் ரோந்து வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

சாலிகிராமம், தசரதபுரம் எட்டாவது தெருவுக்கு போலீசார் வந்த போது அங்கு ரோட்டில் நின்றபடி நடிகை பாபிலோனாவின் தம்பி விக்கி குடிபோதையில் தகராறில் ஈடுபட்டபடி இருந்தார். 
அங்கு சென்ற போலீசார் விக்கியிடம் விசாரணை நடத்தினர். அவர் குடிபோதையில் இருந்ததால் காவல் நிலையத்துக்கு வரும்படி அழைத்தனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த விக்கி ரோந்து வாகன டிரைவர் சங்கரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றதன் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து வந்து போலீசாரை தாக்கியதாக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸை தாக்கிய பிரபல நடிகையின் சகோதரர் கைது ! போலீஸை தாக்கிய பிரபல நடிகையின் சகோதரர் கைது ! Reviewed by EThanthi.in on December 17, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close