EThanthi - வினோத் இயக்கும் அஜித்தின் வலிமை அப்டேட்?

Flash News

வினோத் இயக்கும் அஜித்தின் வலிமை அப்டேட்?

ஹெச். வினோத் அஜித்தை வைத்து இயக்கி வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது. முதலில் சண்டை காட்சியை படமாக்கி வருகிறாராம் வினோத். 
அஜித்தின் வலிமை அப்டேட்?
அஜித் வில்லன்களை அடித்து நொறுக்கும் காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 

போலீஸ் கதையை கையாள்வதில் வினோத் வல்லவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

வலிமை படத்திற்காக அஜித் புது லுக்கிற்கு மாறி யுள்ளாராம். அந்த லுக் வெளியே கசிந்து விடாமல் இருக்க படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு யாரும் செல்போன் எடுத்து வர தடை விதிக்கப் பட்டுள்ளதாம். 
ஏ.ஆர். முருகதாஸுக்கு பெரும் தலை வலி
நல்ல விஷயம் தான். தர்பார் படப்பிடிப்பின் போது அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு பெரும் தலை வலியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமை படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராம் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அங்கு தான் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 168 படத்தின் ஷூட்டிங்கும் நடக்க உள்ளது. 

அதனால் விரைவில் ரஜினி, அஜித் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வலிமை படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. 
போனி கபூர் தான் வலிமை படத்தின் தயாரிப்பாளர்
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தான் வலிமை படத்தின் தயாரிப்பாளர். 

படத்தின் ஹீரோயின் யார் என்பதை இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்க வில்லை. இலியானா அல்லது பாலிவுட் நடிகை யாமி கவுதம் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது
வினோத் இயக்கும் அஜித்தின் வலிமை அப்டேட்? வினோத் இயக்கும் அஜித்தின் வலிமை அப்டேட்? Reviewed by EThanthi.in on December 18, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close