விஜயை விடாமல் துரத்தும் ரசிகர்கள் ஏன் தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 64. படப்பிடிப்பு தற்போது கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிவமோகாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் விஜய் இன்று காலை ஷிவமோகாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து வெளியே வந்த போது அங்கு கூடிய ரசிகர்கள் தலைவா என்று அழைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
Today’s Video! #ThalapathyVijay receives garland from fans! #Thalapathy64— Actor Vijay Fans (@Actor_Vijay) December 18, 2019
pic.twitter.com/PGsTzLcc1a
கேட்டிற்கு வெளியே நின்ற ரசிகர்களில் ஒருவரின் கையில் ரோஜாப்பூ மாலை இருந்தது. கேட்டிற்கு வெளியே நின்ற ரசிகர்களை பார்த்து கையசைத்த விஜய் அந்த ரோஜாப்பூ மாலையை பார்த்து விட்டார்.
உடனே கேட்டிற்கு அருகே வந்து தலையை குனிய அந்த ரசிகர் மாலையை விஜய்க்கு அணிவித்தார். இதை யடுத்து ரசிகருக்கு கை கொடுத்து விட்டு விஜய் அங்கிருந்து சென்றார்.
இந்த சம்பவம் நடந்த போது எடுத்த வீடியோ வெளியாகி யுள்ளது. ரசிகர்கள் மகிழ்ச்சி ரசிகன் தனக்காக அன்புடன் மாலை வாங்கி வந்ததை பார்த்த விஜய் செய்த காரியம் பிற ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஷிவமோகாவில் தளபதி 64 படப்பிடிப்பு நடப்பது குறித்து அறிந்து கர்நாடகாவில் உள்ள விஜய் ரசிகர்கள் அங்கு குவிந்து கொண்டிருக்கி றார்கள்.
Exclusive Pictures Of #ThalapathyVijay With Shivamogga Fans Who Felicitated by Garland Yesterday.! #Thalapathy64 @ThalapathyFilms pic.twitter.com/CziIWm4eI0— Thalapathy Films (@ThalapathyFilms) December 17, 2019
ஷிவமோகாவில் விஜய்யை சந்தித்த ரசிகர்கள் அவருக்கு ராட்சத மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
விஜய் படத்தில் நாசர் தளபதி 64 படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் நாசர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி யுள்ளது. தளபதி 64 படத்தில் ஒரு நடச்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது.
லோகேஷ் எந்த அப்டேட்டும் கொடுக்காமல் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
#ThalapathyVijay Greets His Fans Today Morning & Receives Fans Garland At Out Of The Shivamoga Hotel. #Thalapathy64 #Thalapathy65 pic.twitter.com/pWN0hp1z1s— #Thalapathy65 (@Vijay65_Film) December 18, 2019





No comments