EThanthi - விஜய்க்கு உறவினர் ஆகப்போகும் அதர்வா !

Flash News

விஜய்க்கு உறவினர் ஆகப்போகும் அதர்வா !

மறைந்த நடிகர் முரளிக்கு காவ்யா என்ற மகளும் அதர்வா, ஆகாஷ் என்ற மகன்களும் இருக்கிறார்கள். 
விஜய்க்கு உறவினர் அதர்வா
இவர்களில் அதர்வா 'பாணா காத்தாடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதர்வாவிவின் தம்பி ஆகாஷ். 

இவருக்கும் தற்போது விஜய் 64 படத்தைத் தயாரித்து வரும் சேவியர் பிரிட்டோ மகள் சினேகா என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாம்.

ஆகாஷ் - சினேகா இருவரும் ஒன்றாகப் படித்துள்ளார்கள். 

அப்போதே இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. சினேகா, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆகாஷ் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. 

தற்போது இருவரது வீட்டாரும் சம்மதித்து விட்டதால் விரைவில் திருமண நிச்சயதார் தத்தை நடத்த உள்ளார்களாம். சினேகா, 'சட்டம் ஒரு இருட்டறை 2' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது. 

சேவியர் பிரிட்டோ, விஜய்க்கு நெருங்கிய உறவினர் என்பதால் ஆகாஷ், சினேகா திருமணத்தின் மூலம் அதர்வாவும் விஜய்க்கு உறவினராகப் போகிறார்.
விஜய்க்கு உறவினர் ஆகப்போகும் அதர்வா ! விஜய்க்கு உறவினர் ஆகப்போகும் அதர்வா ! Reviewed by EThanthi.in on November 11, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close