EThanthi - ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு - தலைவி படப்பிடிப்பு தொடங்கியது !

Flash News

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு - தலைவி படப்பிடிப்பு தொடங்கியது !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஏ.எல்.விஜய், பெரிய பட்ஜெட்டில் திரைப்படமாக இயக்குகிறார். இதனை விஷின்துரி, ஷாலிஸ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கிறார்கள். 
ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தயாராகிறது. தமிழ் பதிப்புக்கு தலைவி என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது. 

மற்ற மொழி களுக்கான டைட்டில் அறிவிக்கப் படவில்லை. இதில் ஜெயலலி தாவாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். இதற்காக உடல் எடையை கூட்டி யுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு லண்டன் சென்ற படக்குழு படத்தில் நடிப்பவர் களுக்கு மேக்-அப் டெஸ்ட் எடுத்தது. 

இதில் அனைத்து கேரக்டர் களுக்கும் திருப்தி ஏற்பட்டதால் நேற்று படத்தை முறைப்படி தொடங்கி விட்டார்கள்.

இதற்கிடையில் ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபா படத்தின் ஸ்கிரிப்டை நான் படித்து ஓகே சொன்ன பிறகு தான் ஜெயலலிதா வின் படத்தை யாரும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கில் ஏ.எல்.விஜய்க்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கவுதம் மேனன் எடுத்து முடித்துள்ள தி குயின் வெப் சீரிஸ் இன்னும் வெளியாக வில்லை. 

பெண் இயக்குனர் பிரியதர்ஷினி அறிவித்துள்ள தி அயர்ன் லேடி படம் தொடங்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு - தலைவி படப்பிடிப்பு தொடங்கியது ! ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு - தலைவி படப்பிடிப்பு தொடங்கியது ! Reviewed by EThanthi.in on November 11, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close