EThanthi - ரஷ்யாவில் படமாகும் அதர்வா நடிக்கும் திரைப்படம் !

Flash News

ரஷ்யாவில் படமாகும் அதர்வா நடிக்கும் திரைப்படம் !

'பூமராங்' படத்திற்குப் பிறகு இயக்குநர் ஆர்.கண்ணன், புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில், எம்.கே.ஆர்.பி. புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார் ஆர்.கண்ணன். 
ரஷ்யாவில் அதர்வா


இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் அதர்வா நாயகனாகவும், அனுபமா பரமேஸ்வரன் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

மேலும் 'ஆடுகளம்' நரேன், 'காளி' வெங்கட், ஜெகன், வித்யூலேகா ராமன், ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோரும் நடிக்கின்றனர். 

 '96' படம் மூலம் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் கேமராவைக் கையாள, கபிலன் வைரமுத்து வசனங்களை தீட்டுகிறார். ராஜ் குமார் கலை இயக்குநர் பொறுப்பு ஏற்க, ஆர்.கே.செல்வா படத் தொகுப்பை கவனிக்கிறார்.

உடை வடிவமைப்பாளராக ஜே.கவிதாவும், நடன இயக்குநராக சதீஷும் பொறுப்பேற்றி ருக்கின்றனர். ராஜ் ஸ்ரீதர் நிர்வாகத் தயாரிப்பாள ராகப் பொறுப்பேற்று உள்ளார். எழுதி, இயக்கி யிருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

ரொமாண்டிக் காமெடி எனப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதையில் உருவாகும் இப்படத்தில் அதர்வா முரளியுடன் ஜோடி சேர்ந்து அமர்க்களப் படுத்த இருக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை' போன்ற ரொமாண்டிக் காமெடிப் படங்களைக் கொடுத்து வெற்றிக் கொடி நாட்டிய இயக்குநர் ஆர்.கண்ணன், இந்தப் புதிய ஜோடியுடன் களம் இறங்கி யிருக்கிறார் என்பதால் ரசிகர்களின் எதிர் பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறி யிருக்கிறது.
ரொமாண்டிக் காமெடிப் படம்


தற்போது முதல் கட்ட படப்பிடிப்பை பூர்த்தி செய்திருக்கும் படக்குழு, இந்தக் குறுகிய காலத்திலேயே படத்தின் முக்கிய பகுதிகள் அடங்கிய ஐம்பது சதவீதக் காட்சிகளை படமாக்கி யிருக்கிறது.

இது குறித்து தயாரிப்பாளரும், இயக்குநரு மான ஆர்.கண்ணன் பேசும் போது, "நாயகன் அதர்வாவை டைரக்டர்ஸ் டிலைட் என்றால் மிகையாகாது. 

தன் நடிப்புத் திறனை அவர் மேம்படுத்தி வருவதை இந்தப் படப்பிடிப்பின் போது கண்கூடாகப் பார்த்தேன். இந்தப் படத்தின் கதையும் அவரது பாத்திரமும் இதற்கு முன் அவர் நடித்த படங்களி லிருந்து முற்றிலும் மாறுபட்டது.

நான் வடிவமைத்த பாத்திரம் அவரது சிறப்பான நடிப்பால் படத்தில் முழுமையடைந் திருப்பதை நான் ரஷ் பிரதிகளைப் பார்க்கும் போது உணர்ந்தேன்.

அனுபாமா பரமேஸ்வரன் பார்வை யாளர்களின் மனதில் இடம் பிடிக்கக் கூடிய வலுவான பாத்திரத்தில் தோன்றுகிறார். கிட்டத்தட்ட '96' படத்தில் த்ரிஷா ஏற்ற வேடத்தைப் போன்றது இது. 

அனுபாமாவின் அப்பா வேடத்தில் 'ஆடுகளம்' நரேன் நடித்திருக்கிறார். நகைச்சுவை யாகவும், உண்ர்வு பூர்வமாகவும் நடிக்க வேண்டிய இந்த பாத்திரத்தை தன் இயல்பான நடிப்பால் நியாயப் படுத்தி யிருக்கிறார்.

இதேபோல் 'காளி' வெங்கட், ஜெகன், வித்யுத்லேகா ஆகியோரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து செவ்வனே செய்திருக்கின்றனர். 

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை நாங்கள் இருபது நாட்கள் தான் நடத்தினோம் என்றாலும், இதிலேயே கிட்டத்தட்ட பாதி படப்பிடிப்பை முடித்து விட்டோம்.
அதர்வா நடிக்கும் திரைப்படம்


சென்னை புறநகர் பகுதியான நீலாங்கரையில் பிரத்யேகமாக ஒரு அரங்கு அமைத்து அதில் படப்பிடிப்பை நடித்தி யிருக்கிறோம்.

மேலும் புதுப்பேட்டை பகுதியில் சண்டைக் காட்சி ஒன்றையும் படமாக்கி யிருக்கிறோம். 

ஏராளமான பொது மக்கள் மத்தியில் நடைபெறும் இந்த சண்டைக் காட்சியை நான்கு நாட்களில் ஸ்டண்ட மாஸ்டர் செல்வா மிகச் சிறப்பாக படமாக்கிக் கொடுத்தார்.

காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர் களுடன் நடத்திய படப்படிப்பு தான் சாவாலாக இருந்தது என்றாலும், அதையும் வெற்றிகரமாக முடித்து விட்டோம்.

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க இருக்கிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி சுமார் இருபது நாட்கள் இந்த படப்பிடிப்பு இருக்கும். 

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகெங்கும் இப்படம் திரையிடத் திட்டமிடப் பட்டிருக்கிறது." என்றார்.
ரஷ்யாவில் படமாகும் அதர்வா நடிக்கும் திரைப்படம் ! ரஷ்யாவில் படமாகும் அதர்வா நடிக்கும் திரைப்படம் ! Reviewed by EThanthi.in on November 04, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close