EThanthi - பாடலாசிரியரான சிவகார்த்திகேயன் - நன்றி சொன்ன விக்ரம் !

Flash News

பாடலாசிரியரான சிவகார்த்திகேயன் - நன்றி சொன்ன விக்ரம் !

துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்யா வர்மா திரைப்படத்திற் காக நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி யிருக்கிறார். இதற்கு முன் சிவகார்த்திகேயன் கோலமாவு கோகிலா படத்திற்காக எனக்கு கல்யாண வயசுதான் வந்திருச்சு என்ற பாடலை எழுதியிருந்தார். 
பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்

அதற்குப் பிறகு நம்ம வீட்டு பிள்ளை படத்தில், காந்த கண்ணழகி பாடலை எழுதியிருக்கிறார்.

இரண்டும் ரசிகர்கள் இடையே பெரும் ஆதரவை பெற்று ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் கடைசியாக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இமானுவேல் மற்றும் ஜஸ்வர்யா ராஜேஷ், பாரிதிராஜா, சூரி, நட்டி, சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதா பாத்திரத்திங்களில் நடித்து இருந்தனர்.

சன் பிக்சர்ஸ் பேட்ட படத்திற்கு பிறகு இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சன் பிக்சர்ஸால் சமீபத்தில் நடத்தப்பட்டது.

இதில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா உட்பட சிவகார்த்திகேயன், பாண்டிராஜ், சூரி, டி.இமான் மற்றும் பல முக்கிய திரையுலக பிரரும் இதில் கலந்து கொண்டனர்.

சக்ஸஸ் மீட் புகைப்படங் களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படத்தை வெற்றி பெற செய்ததுக்கு நன்றி தெரிவித்து இருந்தார் டி.இமான்.

இந்த படத்தில், சிவகார்த்திகேயன் டி.இமான் இசையில் காந்த கண்ணழகி பாடலை எழுதியிருந்தார். இதற்கு முன் சிவகார்த்திகேயன் கோலமாவு கோகிலா படத்திற்காக எனக்கு கல்யாண வயசு பாடலை எழுதியிருந்தார்.

அதற்குப் பிறகு காந்த கண்ணழகி பாடலை எழுதி யிருக்கிறார். இரண்டும் ரசிகர்கள் இடையே பெரும் ஆதரவை பெற்றது.
சிவகார்த்திகேயன்
இதனைத் தொடர்ந்து நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தில், இது என்ன மாயமே என்று தொடங்கும் பாடலை எழுதி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

படம் தெலுங்கில் வந்த அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பதால் அந்த படத்தில் குறிபிட்ட ஒரு இடத்தில் எமிட் எமிட் எமிட்டோ எனும் வரிகள் வரும்.

அதற்கு இசையமைப்பாளர் ரதன் இசையமைத் திருக்கிறார். தமிழில் ஆதித்யா வர்மாவுக்கு அதே பாடலுக்கு வரிகள் கொடுத்தி ருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஆதித்யா வர்மா படத்தை இயக்கி வருகிறார் கிரிசாயா. இவர் தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய போது விக்ரம் பாடல் எழுதிய சிவகார்த்திக்கேய னுக்கு மேடையிலேயே நன்றி சொன்னார்.

சிவகார்த்திக்கேய னிடம் போனில் கேட்ட உடனே பாடலை எழுதி கொடுத்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பாடலாசிரியரான சிவகார்த்திகேயன் - நன்றி சொன்ன விக்ரம் ! பாடலாசிரியரான சிவகார்த்திகேயன் - நன்றி சொன்ன விக்ரம் ! Reviewed by EThanthi.in on November 04, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close