EThanthi - கதாநாயகியாக நடிக்கும் மாளவிகா !

Flash News

கதாநாயகியாக நடிக்கும் மாளவிகா !

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியானது. 
மாளவிகா

தளபதி 64 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இந்தப் படத்துக்கு இசை - அனிருத். இந்தப் படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. விஜய்யின் 64-வது படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். 

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. விஜய் - விஜய் சேதுபதி என இரு பெரும் நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால் தளபதி 64 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது. 
மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் இப்படத்தில் நடிக்க வுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. அங்கமாலி டைரீஸ் படத்தில் நடித்த இவருக்கு அதிகக் கவனம் கிடைத்தது. ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது. 

இந்நிலையில் இன்று வெளியான அறிவிப்பில் மலையாள நடிகை மாளவிகா, நடிகர் சாந்தனு ஆகியோரும் இப்படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
கதாநாயகியாக நடிக்கும் மாளவிகா ! கதாநாயகியாக நடிக்கும் மாளவிகா ! Reviewed by EThanthi.in on October 03, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close