EThanthi - 11வது மாடியில் இருந்து விழுந்த பாறை - நூலிழையில் தப்பிய நடிகை !

Flash News

11வது மாடியில் இருந்து விழுந்த பாறை - நூலிழையில் தப்பிய நடிகை !

நாகினி சீரியல் நடிகை மௌனி ராய் ஒரு விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். நாகினி என்ற ஒரே சீரியல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். 
11வது மாடியில் இருந்து விழுந்த பாறை

இவர் தற்போது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். எனவே சீரியல்களில் நடிப்பதில்லை. மௌனி ராய் தற்போது நடித்துள்ள படம் 'மேட் இன் சைனா'. 

இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதறக் காக மௌனி ராய் காரில் சென்று கொண்டிருந்தார். 
ஜூஹு சிக்னலில் கார் நின்று கொண்டிருந்த போது, மெட்ரோ ரயில் கட்டு மானத்தில் இருந்து ஒரு பெரிய பாறை கார் மீது விழுந்தது. சுமார் 11வது மாடியில் இருந்து அந்த பாறை விழுந்துள்ளது. 

இதில் காரின் மேற்பக்க கண்ணாடி உடைந்துவிட்டது. நல்லவேளையாக மௌனி ராய்க்கு எதுவும் ஆகவில்லை. நூலிழையில் அவர் உயிர் தப்பினார். 

இது குறித்து தனது டிவீட் செய்துள்ள மௌனி ராய், "நான் காரில் சென்று கொண்டிருந்த போது ஜூஹு சிக்னல் அருகே மெட்ரோ கட்டு மானத்தில் இருந்து பெரிய பாறை காரின் மீது விழுந்தது. 

இதுவே நடந்து போனவர்கள் யார் மீதாவது விழுந்திருந்தால் என்னவாகி யிருக்கும். மும்பை மெட்ரோ பொறுப்புடன் நடப்பதற்கு யாராவது ஆலோசனை இருந்தால் சொல்லுங்கள்', என காட்டமாக பதிவிட்டுள்ளார். 
மேட் இன் சைனா படத்தை அடுத்து, பிரமாஸ்த்ரா எனும் படத்தில் மௌனி ராய் நடித்துள்ளார். இந்த படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அபிதாப் பச்சன் ஆகியோருடன் சேர்ந்து
11வது மாடியில் இருந்து விழுந்த பாறை - நூலிழையில் தப்பிய நடிகை ! 11வது மாடியில் இருந்து விழுந்த பாறை - நூலிழையில் தப்பிய நடிகை ! Reviewed by EThanthi.in on October 03, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close