EThanthi - அமில வீச்சுக்கு ஆளான நடிகையின் சகோதரி - கைகொடுத்த காதலன் !

Flash News

அமில வீச்சுக்கு ஆளான நடிகையின் சகோதரி - கைகொடுத்த காதலன் !

கல்லூரி நாள்களின் போது அமில வீச்சுக்கு ஆளான பிரபல நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சண்டல், தன்னம்பிக்கை யுடன் தான் போராடிய கதையை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அமில வீச்சு

ட்விட்டரில் அவர் கூறியதாவது:

கல்லூரி நாள்களின் போது எடுத்த புகைப்படம் இது. என்னிடம் ஒருவன் காதலைத் தெரிவித்தான். அதை மறுத்தேன். உடனே அவன் (இந்தப் புகைப்படம் எடுத்த பிறகு நடந்த சம்பவம்) என் முகத்தின் மேல் ஒரு லிட்டர் அமிலத்தை வீசினான்.

இதனால் 54 அறுவை சிகிச்சைகளை நான் மேற்கொள்ள வேண்டியிருந்தது. என்னுடைய இளைய சகோதரியும் (கங்கனா) சாவை நெருங்கும் வரையில் கடுமையாகத் தாக்கப் பட்டாள்.
ஸொமோட்டோ உருவாக காரணமாக இருந்த இரு நண்பர்கள் !
ஏனெனில் எங்களுடைய பெற்றோர் அழகான, அறிவான, தன்னம்பிக்கை யுள்ள பெண்களைப் பெற்றெடுத்ததால் . உலகம், பெண் குழந்தைகளு க்குப் பாதுகாப்பான தாக இல்லை. அப்போது என் நண்பராக இருந்த என் கணவர், என் காயங்களைக் கழுவினார்.

பல வருடங்களாக மருத்துவ மனைக்கு வெளியே நின்றார். ஆதரவளித்த சகோதரி மற்றும் பெற்றோரால் நான் மீண்டு வந்தேன். அதனால் என்னுடைய நிலையி லிருந்து தேறி வந்தததற்கு நான் மட்டும் காரணமல்ல.
கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி

என்னுடைய அழகை இழந்ததற்கு பலரும் வருந்துகிறார்கள். ஆனால் உங்கள் கண் எதிரே உடல் உறுப்புகள் கரையும் போது அழகைப் பற்றிக் கடைசியாகத் தான் எண்ணுவீர்கள்.

5 வருடங்களில் 54 அறுவைச் சிகிச்சைகள் செய்த பிறகும் மருத்துவர்க ளால் என்னுடைய காதை பழைய நிலைமைக்குக் கொண்டு வர முடியவில்லை. ஒரு கண்ணை இழந்தேன். விழித்திரை அறுவைச் சிகிச்சை மேற்கொண்டேன்.
டிஸ்க் விலகலும் கழுத்து வலியும் !
என் உடலின் இதர பகுதிகளி லிருந்த தோலை எடுத்து பலமாகக் காயம்பட்ட மார்பகத்தில் ஒட்டினார்கள். என் குழந்தைக்குப் பால் கொடுக்கும் போது பல்வேறு பிரச்னைகளை எதிர் கொண்டேன்.

இப்போதும் என்னால் கழுத்தை அதிகமாக நீட்ட முடியாது. ஒட்டப்பட்ட தோல்களி லிருந்து அரிக்கும் போது செத்திருக்கலாம் எனத் தோன்றும். அமில வீச்சுக்குப் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக உள்ளது. 
நடிகையின் சகோதரி

ஆனால் என் சம்பவத்துக்குத் தொடர்புடைய குற்றவாளி சில வாரங்களில் பிணையில் வெளியே வந்து விட்டான். வெளியே அவன் சுதந்தரமாக நடமாடு வதைக் கண்டபோது மனவேதனை ஏற்படும். அந்த வழக்கைத் தொடர்வதை நான் நிறுத்தி விட்டேன்.

இது போன்று குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை ஏன் அளிக்கக் கூடாது? பல்கலைக் கழகத்தின் சிறந்த மாணவியாக இருந்த எனக்கு அழகு பெரிய விஷயமாக இருந்த தில்லை.
பெண்களே மறைவான பகுதியா?
ஆனால் என்னுடைய இளமையான காலம் முழுக்க மருத்துவ மனைகளில் தான் கழிந்தது. அமில வீச்சால் 90 சதவிகிதக் காயங்கள் இருந்தும் அமில வீச்சால் பாதிக்கப் பட்டவர்களுக்கு என தனி இட ஒதுக்கீடு கிடையாது.

ஏன்? நம் அமைப்பின் மீது இக்கேள்விகளை எழுப்ப வேண்டும். குற்றவாளி க்குத் தண்டனை பெற்றுத் தருவதை விடவும் எனக்குத் தற்போது கணவரும் மகனுமே முக்கியம் என்று கூறியுள்ளார்.

மன தைரியத்துடன் சவாலை எதிர்கொண்டு மீண்டு வந்துள்ள ரங்கோலியின் போராட்ட வாழ்க்கைக்குச் சமூக வலை தளங்களில் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது.
அமில வீச்சுக்கு ஆளான நடிகையின் சகோதரி - கைகொடுத்த காதலன் ! அமில வீச்சுக்கு ஆளான நடிகையின் சகோதரி - கைகொடுத்த காதலன் ! Reviewed by EThanthi.in on October 03, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close