EThanthi - ஆட்டோவில் சவாரி சென்ற கியாரா !

Flash News

ஆட்டோவில் சவாரி சென்ற கியாரா !

மகேஷ்பாபு நடிப்பில், பரத் எனும் நான் பெயரில் வெளியான படத்தில் ஹீரோயி னாக நடித்திருந்த கியாரா அத்வானி தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் பங்கேற்க இவர் ஆடம்பர காரில்தான் வந்து கலந்து கொள்கிறார். 
ஆட்டோவில் சவாரி சென்ற கியாரா

இந்நிலையில் கியாரா, திடீரென்று ஆட்டோவில் சென்றதை பார்த்து ஆச்சர்யப் பட்டார்கள். படப்பிடிப்பிற் காக சென்றிருந்த கியாரா பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். 

ஆனால் அவர் வந்திருந்த ஆடம்பர கார் வெகு தூரத்தில் பார்க்கிங் செய்யப் பட்டிருந்தது. காருக்கு செல்வதற்காக ஆட்டோவை பிடித்து சென்றார். துணைக்கு பெண் நடன இயக்குனர் ஒருவரையும் அழைத்துச் சென்றார். 
இந்த சின்ன விஷயத்தை கியாராவின் உதவியாளர்கள் ஊதிப் பெருக்கி பெரிதாக்கி விட்டார் கள். கியாரா, ஆட்டோவில் ஏறிச் செல்வதை ஏதோ அரிய நிகழ்வு போல் வீடியோவில் படமாக்கி வெளியிட்டனர். 

'ஏங்க இப்படி பண்றீங்க..' என்று அவர்களிடம் கேட்ட போது, 'எல்லாம் ஒரு விளம்பரத் துக்குத் தான்....' என அசடு வழிந்தனர்.
ஆட்டோவில் சவாரி சென்ற கியாரா ! ஆட்டோவில் சவாரி சென்ற கியாரா ! Reviewed by EThanthi.in on September 04, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close