ரஜினி பாணியில் அரசியலில் குதிக்கும் நடிகை அமலாபால் !
நடிகர் ரஜினி பாணியில், அடிக்கடி இமயமலை சென்று வரும், நடிகை அமலாபால், ''எதிர் காலத்தில், நிச்சயமாக அரசியலுக்கு வருவேன்,'' என, தெரிவித்தார்.
'மைனா, வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி 'போன்ற படங்களில் நடித்துள்ளவர், அமலாபால்.
திருமணமாகி விவாகரத்துக்கு பின், தற்போது, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதா பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
நடிகையர் ராதிகா, குஷ்புவை போல, இவருக்கும் அரசியல் ஆசை துளிர்த்துள்ளது.
அமலாபால் நடித்துள்ள, 'ராட்சசன்' படம், அக்., 5ம் தேதி வெளியா கிறது. இப்படத்தின், இசை வெளியீட்டு விழா, சென்னையில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில் பங்கேற்ற, அமலாபால் அளித்த பேட்டி:'ராட்சசன்' கதையை, விஷ்ணு விஷால் தான், எனக்கு விளக்கி சொன்னார்.
படத்தை, இப்போது பார்க்கும் போது, இயக்குனர் உள்ளிட்டோரின் உழைப்பு தெரிகிறது.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில், பல்லாயிரம் பேர் மிகவும் கஷ்டப் பட்டனர். அவர்களுக்கு, என்னால் முடிந்த உதவிகளை, நேரடியாக சென்று செய்தேன்.
ரஜினியை போல, இமய மலைக்கு செல்வது, எனக்கு பிடித்துள்ளது. அங்கே சென்றால் தான், என்னை நானே உணர்கிறேன்.
அரசியலில், எனக்கும் ஆர்வம் இருக்கிறது. எதிர் காலத்தில், நானும் அரசியலுக்கு வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.



No comments