EThanthi - எதையும் நான் சந்திக்க காத்திருக்கிறேன் - கவிஞர் வைரமுத்து !

Flash News

எதையும் நான் சந்திக்க காத்திருக்கிறேன் - கவிஞர் வைரமுத்து !

இந்தி பட உலகை தொடர்ந்து, தமிழ் திரை யுலகமும் பாலியல் புகார்களால் அதிர்ச்சி யில் ஆட்டம் கண்டு வருகிறது.
அந்த வரிசையில் சமீப காலமாகவே ஊடகங் களில் விவாத பொருளாக காட்சி யளித்து

வருபவர்கள் கவிஞர் வைரமுத்து வும், பிரபல பின்னணி பாடகி சின்மயியும் தான்.

‘சுவிட்சர்லாந் தில் ஒரு நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட போது கவிஞர் வைரமுத்து என்னை ஓட்டல் அறைக்கு தனியாக வருமாறு அழைத்தார்.

நான் மறுத்து விட்டேன். என்னை போல அவரால் தொல்லை அனுபவித்த வர்கள் பலரும் உண்டு.

எனவே இது போன்ற பாலியல் துன்புறுத்தலு க்கு எதிராக பாதிக்கப் பட்டோர் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்’,

என்று கூறி ஒட்டு மொத்த திரை யுலகையுமே அதிர செய்தார் சின்மயி.

கவிஞர் வைரமுத்து மீதான சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு திரையுலகில் கடும் அதிர் வலைகளை ஏற்படுத் தியது.

இந்த பாலியல் குற்றச் சாட்டை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் ஒரு விளக்கம் அளித்திருந்தார்.

அதில் ‘அறியப் பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது.

அண்மைக் காலமாக நான் தொடர்ச்சி யாக அவமானப் படுத்தப்பட்டு வருகிறேன்.

அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவ தில்லை.

உண்மையைக் காலம் சொல்லும்’, என்று குறிப்பிட்டார்.

கவிஞர் வைரமுத்து விளக்கம் தெரிவித்த சில நிமிடங் களிலேயே, ‘அவர் ஒரு பொய்யர்’ என்று பாடகி சின்மயி தனது டுவிட்டரில் பதிவிட்டார்.
காரசார மான விவாதங்கள் முன்னெடுக்கப் பட்ட போதும், ஆதரவு -எதிர்ப்பு கருத்துகள் வந்த போதும்

கவிஞர் வைரமுத்து மீது தான் தெரிவித்த குற்றச் சாட்டுகளில் இருந்து சின்மயி பின் வாங்கவே இல்லை.

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச் சாட்டை முன் வைத்த சின் மயிக்கு ஆதரவாக பலரும் கருத்து வெளியிட்டு இருந்தனர்.

நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சித்தார்த், நடிகை ஸ்ரீரெட்டி உள்ளிட்ட திரையு லகினரும் ஆதரவு தெரிவித் திருந்தனர்.

இது சமூக வலை தளங்களில் கடுமை யான விவாத பொருளாக உருவெடுத்தது.

‘கவிஞர் வைரமுத்து மீது நான் அளித்திரு க்கும் குற்றச்சாட்டு உண்மை யானது.

நான் இதுவரை கூறிய குற்றச் சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவிக் காதது ஏன்?’, என்றும் கூறி மீண்டும் அதிர் வலைகளை ஏற்படுத்தினார்.

மேலும் ‘வக்கீல் களுடன் ஆலோசித்து சட்ட ரீதியாக கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுப்பேன்’, என்றும் தெரிவித் திருந்தார்.

இந்த பாலியல் குற்றச் சாட்டு தொடர்பாக விளக்கத்தை தவிர எந்தவித மறுப்பும் கவிஞர் வைரமுத்து இதுவரை தெரிவிக்கா மலேயே இருந்தார்.

இந்த நிலையில் சின்மயி குற்றச்சாட்டு எழுப்பி ஏறக்குறைய ஒரு வாரம் ஆன நிலையில்

கவிஞர் வைரமுத்து தனது மவுனத்தை கலைத்து மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து கவிஞர் வைரமுத்து ஒரு வீடியோ பதிவை நேற்று வெளி யிட்டார். அதில் அவர் பேசியிருப்ப தாவது:-

வணக்கம் என் மீதும் சுமத்தப்பட்டு வரும் குற்றச் சாட்டுகள் எல்லாம் முழுக்க, முழுக்க பொய் யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை.

அவை உண்மையாக இருந்தால் சம்பந்தப் பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்க லாம். சந்திக்க காத்திரு க்கிறேன்.

மூத்த வக்கீல்க ளோடும், அறிவுலகத்தின் ஆன்றோர் களோடும் கடந்த ஒரு வார காலமாக ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன்.

அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து, திரட்டி வைத்திருக் கிறேன். நீங்கள் வழக்கு போடலாம். சந்திக்க காத்திருக் கிறேன்.

நான் நல்லவனா... கெட்டவனா? என்று இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம்.

நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்கு தலை வணங்கு கிறேன். உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும்

பாடகி சின்மயி டுவிட்டரில் பதிவு

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச் சாட்டை முன் வைத்து பரபரப்பாக பேசப்பட்டு வருபவர், பாடகி சின்மயி.

தன் மீதான பாலியல் குற்றச் சாட்டுக்கு விளக்கம் அளித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கு,

‘அவர் ஒரு பொய்யர்’ என்று பதில் பதிவிட்டு அதிர் வலையை ஏற்படுத்தி னார்.

இந்தநிலை யில் தன் மீதான குற்றச்சாட்டு முழுக்க பொய் என்று கவிஞர் வைரமுத்து

தன்னிலை விளக்கம் கொடுத்து ஒரு வீடியோ வெளியிட் டுள்ளார்.

இதற்கிடையில் பாடகி சின்மயியும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளி யிட்டிருக்கிறார்.

அதில், ‘வைரமுத்துவு க்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும்.
அது தான் சரியானது’, என்று கூறி யுள்ளார். சின்மயியின் இந்த கருத்து தற்போது பரபரப்பாக பேசப் படுகிறது.

‘சந்த கவிஞர் மீது சந்தேகம் வலுக்கிறது’ வைரமுத்து விளக்கம் குறித்து தமிழிசை விமர்சனம்

பாடகி சின்மயி விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து நேற்று தன்னிலை விளக்கம் அளித்து வீடியோ காட்சி ஒன்றை வெளி யிட்டார்.

இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

அதில், “சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர்... நிந்திக்க அவகாசம்

கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன?

சந்தக் கவிஞர் மீது சந்தேகமே அதிகரிக் கிறது..........” என்று தமிழிசை சவுந்தர ராஜன் கூறி யுள்ளார்.
எதையும் நான் சந்திக்க காத்திருக்கிறேன் - கவிஞர் வைரமுத்து ! எதையும் நான் சந்திக்க காத்திருக்கிறேன் - கவிஞர் வைரமுத்து ! Reviewed by EThanthi.in on October 09, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close