EThanthi - தியேட்டரில் டிக்கெட் விற்ற தயாரிப்பாளர் !

Flash News

தியேட்டரில் டிக்கெட் விற்ற தயாரிப்பாளர் !

ஜெய் நடித்துள்ள நீயா 2 படம் மே 10-ந் தேதியான இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் மே 24-ந் தேதிக்கு தள்ளிப் போனது. அதனைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் 100 படத்திற்கும் பிரச்சனை வந்தது. நேற்று வெளியாக வேண்டிய அந்த படம் பிரச்சனை காரணமாக தள்ளிப் போனது.
தியேட்டரில் டிக்கெட் விற்ற தயாரிப்பாளர்
அதனை சரிசெய்து ஒரு நாள் தள்ளி இன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், மீண்டும் படம் தள்ளிப் போயுள்ளது. அதே போல் விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீசும் தள்ளி வைக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஜீவா நடித்துள்ள கீ படம் மட்டும் பிரச்சனை களை கடந்து இன்று சற்று தாமதமாக ரிலீசானது. 

மேலும் காதல் முன்னேற்றக் கழகம், உண்மையின் வெளிச்சம், வேதமானவள், எங்கு சென்றாய் என் உயிரே உள்ளிட்ட படங்களும் இன்று வெளியாகிறது. இந்த நிலையில், திரையரங்கு க்கு வந்து ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனை பார்த்த எங்கு சென்றாய் என் உயிரே படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.வி.பாண்டி தனது படத்தை பார்க்க வருமாறு ரசிகர்களை அழைத்துள்ளார். 
டிக்கெட் விற்ற தயாரிப்பாளர்
ஆனால் ரசிகர்கள் முன்வராத நிலையில், டிக்கெட் வாங்கி, அதனை குறைந்த விலைக்கு ரசிகர்களிடம் கொடுத்து படத்தை பார்க்க அனுப்பினார். மேலும் படம் பார்த்தவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் டிக்கெட் காசுடன் 100 ரூபாய் தருவதாக கூறினார். உங்களை திருப்திபடுத்தும் வகையில் நகைச்சுவை, பாடல், கதை உங்களை கண்டிப்பாக கவரும். தயவுசெய்து என்னுடைய படத்தையும் பார்ப்பதற்கு திரையரங்குக்கு வாருங்கள். 

சிறிய படங்களையும் ஆதரியுங்கள் என்று ஆதங்கத்தோடு கூறினார். இதனை பார்த்து சிலர் அவரிடம் டிக்கெட் வாங்கி படம் பார்க்க சென்றனர். இவ்வாறாக தமிழ் சினிமாவில் உருவாகும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைப்பதில்லை என்பது பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் களின் குரலாக உள்ளது. எனவே சிறிய படங்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டால் சிறிய படங்களு க்கும் வரவேற்பு பெறும்.
தியேட்டரில் டிக்கெட் விற்ற தயாரிப்பாளர் ! தியேட்டரில் டிக்கெட் விற்ற தயாரிப்பாளர் ! Reviewed by EThanthi.in on May 12, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close