EThanthi - என்னையே எனக்கு அடையாளம் தெரியவில்லை - சமீரா ரெட்டி !

Flash News

என்னையே எனக்கு அடையாளம் தெரியவில்லை - சமீரா ரெட்டி !

சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சமீரா ரெட்டி. அஜித்தின் அசல், விஷாலின் வெடி, மாதவனின் வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விட்டார். அவருக்கு நான்கு வயதில் ஹன்ஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சமீரா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்ப தாவது:-
என்னையே எனக்கு அடையாளம் தெரியவில்லை
நான் திருமணமாகி இரண்டு மாதங்களில் கர்ப்பமாகி விட்டேன். பிரசவம் முடிந்த பிறகு மீண்டும் நடிக்க வருவது என்று திட்ட மிட்டேன். ஆனால் எல்லாம் நேர் எதிராகி விட்டது. கர்ப்ப காலம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. நான் முதல் முறை கர்ப்பமாக இருந்த போது ஏற்பட்ட பிரச்சினை யால் 4 முதல் 5 மாதங்கள் படுக்கையில் இருந்தேன். அதனால் உடல் எடை ஏற தொடங்கியது. 

படங்கள், விருது விழாக்கள் என்று பிசியாக இருந்த எனக்கு படுத்த படுக்கையாக இருந்தது கஷ்டமாக இருந்தது. பிரசவம் ஆன பிறகு 102 கிலோ ஆகி விட்டேன். 32 கிலோ கூடுதல் எடையில் எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. நான் வெளியே சென்ற போது என்னை பார்த்தவர்கள், சமீரா ரெட்டியா இது, என்ன ஆச்சு என்று வியந்தனர். 

இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்தேன். தற்போது நான் மீண்டும் கர்ப்பமாக உள்ளேன். இந்த பிரசவத்தின் போதும் உடல் எடை போடும் என்று தெரியும். எப்பொழுதுமே கவர்ச்சியாக இருக்க முடியாது. அதற்கும் ஒரு முடிவு உண்டு’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
என்னையே எனக்கு அடையாளம் தெரியவில்லை - சமீரா ரெட்டி ! என்னையே எனக்கு அடையாளம் தெரியவில்லை - சமீரா ரெட்டி ! Reviewed by EThanthi.in on May 12, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close