EThanthi - நான் கர்ப்பமாக என்று தெரிந்தும் படுக்கைக்கு அழைத்தனர் - சமீரா ரெட்டி !

Flash News

நான் கர்ப்பமாக என்று தெரிந்தும் படுக்கைக்கு அழைத்தனர் - சமீரா ரெட்டி !

தமிழில் கவுதம் மேனன் இயக்கி சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் கதா நாயகியாக அறிமுகமானவர் சமீரா ரெட்டி. மீண்டும் அவர் இயக்கத்திலேயே ‘நடுநிசி நாய்கள்’ படத்திலும் நடித்தார். அஜித்துடன் அசல் படத்திலும் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். பின்னர் அக்‌ஷய் வர்தே என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
நான் கர்ப்பமாக என்று தெரிந்தும் படுக்கைக்கு அழைத்தனர்
தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் படங்களில் நடித்தபோது தன்னை சிலர் படுக்கைக்கு அழைத்ததாக சமீரா ரெட்டி பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு வெளியேறி விட்டேன். எதற்காக நடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு விலகினேன் என்பதை தெரிந்து கொள்ள ஒருவர் கூட ஆர்வம் காட்ட வில்லை. இதனால் திரையுலகமே இப்படித்தான் என்று முடிவு செய்து கொண்டேன்.
சமீரா ரெட்டி
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலைகள் ஒருபோதும் இருந்தது இல்லை. என்னை பல தடவை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் படுக்கைக்கு அழைத்து இருக்கிறார்கள். நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் கூட படுக்கைக்கு அழைத்தனர். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளன. இந்த நிலைமை மாற வேண்டும். ஆனால் அது மெதுவாகத் தான் நடக்கும்.” இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.
நான் கர்ப்பமாக என்று தெரிந்தும் படுக்கைக்கு அழைத்தனர் - சமீரா ரெட்டி ! நான் கர்ப்பமாக என்று தெரிந்தும் படுக்கைக்கு அழைத்தனர் - சமீரா ரெட்டி ! Reviewed by EThanthi.in on May 12, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close