போராட்டத்திற்கு பிறகு வாக்களித்த நடிகர் சிவகார்த்திகேயன் !
நடிகர் சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா மற்றும் நடிகர் ரோபோ சங்கர் ஆகியோருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசர வாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்ப தாக தகவல் வெளியானது.
ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயனின் மனைவி கிருத்திகாவிற்கு ஓட்டு உள்ளது. அதே சமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது.
ஆனால் கடும் போராட்ட த்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறும் போது வாக்களிப்பது உங்கள் உரிமை; அந்த உரிமைக்காக போராடுங்கள் என கூறினார்.



No comments