EThanthi - படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பை நிறுத்திய நடிகை !

Flash News

படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பை நிறுத்திய நடிகை !

சீரியல் நடிகைகளு க்கும் பாலியல் தொல்லை எழுகிறது. படுக்கைக்கு வந்தால் சீரியலில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று கூறுகின்றனர். அப்படியாக ஒரு நடிகைக்கு இந்த மாதிரியான அழைப்பு வந்தது. அப்புறம் அந்த நடிகை சீரியலில் நடிப்பதையே விட்டு விட்டார். 
படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பை நிறுத்திய நடிகை
‘கிச்டி’ என்கிற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா பத்ரா. இந்த சீரியலின் மூலம் இவர் சின்னத் திரையில் பிரபலமானார். அதையடுத்து ரிச்சா ‘ஃபா பாஹு அர் பேபி’ மற்றும் ‘மிஸஸ் டெண்டுல்கர்’ போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். 

அதன் பிறகு நீண்ட காலமாக சீரியல்களில் அவர் ஏன் நடிக்க வில்லை என அவரிடம் கேட்டதற்கு “திருமணத்திற்கு பிறகு நான் வாய்ப்பு தேடிய போது ஒரு காஸ்டிங் மேனேஜர் என்னை படுக்கைக்கு அழைத்தார். ‘என்னை மகிழ்ச்சியாக்கு உனக்கு வாய்ப்பு தருகிறேன்’ என கேட்டார். 

காபி ஷாப்பில் சந்திக்க கேட்டால், நீ ஹோட்டல் அறைக்கு வா என வற்புறுத்தினர். அந்த சம்பவத்திற்கு பிறகு நான் என் பெயரை கெடுத்துக் கொள்ள விரும்பாமல் நடிப்பதையே நிறுத்தி விட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பை நிறுத்திய நடிகை ! படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பை நிறுத்திய நடிகை ! Reviewed by EThanthi.in on April 18, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close