EThanthi - தளபதி 63 படத்தில் நடிக்கும் தேவதர்ஷினி !

Flash News

தளபதி 63 படத்தில் நடிக்கும் தேவதர்ஷினி !

சர்கார் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் இப்போது மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். 
தளபதி 63 படத்தில் தேவதர்ஷினி
மேலும், யோகி பாபு, ஜாக்கி ஷெராப், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, கதிர், விவேக், இந்துஜா என ஒரு நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர். தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளது. 

காஞ்சனா, 96 போன்ற படங்களில் நடித்த நடிகை தேவதர்ஷினி தளபதி 63 படத்தில் விஜய்க்கு அக்காவாக நடிக்கின்றார். மேலும் இந்த படத்தின் அவருடைய கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்க வைக்கும் என்றும் நடிகை தேவதர்ஷினி தெரிவித்துள்ளார்.
தளபதி 63 படத்தில் நடிக்கும் தேவதர்ஷினி ! தளபதி 63 படத்தில் நடிக்கும் தேவதர்ஷினி ! Reviewed by EThanthi.in on April 24, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close