அண்ணாச்சி வீட்டில் திருட்டு 41 சவரன் நகை, ரூ. 10 ஆயிரம் மாயம் !
காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. சின்னத் திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் இமான் அண்ணாச்சி. சென்னை காதல், தலைநகரம், கோ, ஜில்லா, சாமி 2 என பல படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பிற்கு இடையே தொலைக் காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாள ராகவும் இருந்து வருகிறார். இவரது, சொல்லுங்கண்ணே சொல்லுங்க மற்றும் குட்டீஸ் சுட்டீஸ் நிகழ்ச்சிகள் மக்களிடையே மிகவும் பிரபலம். இவர் சென்னை அரும்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இமான் அண்ணாச்சி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர், தனது வீட்டில் பீரோவில் இருந்த 41 சவரன் நகைகளும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும் கொள்ளை யடிக்கப் பட்டிருப்பதாக தெரிவித் துள்ளார். வீட்டில் ஆட்கள் இருந்த போதே, நகைகள் காணாமல் போனதாக அந்தப் புகாரில் கூறப் பட்டுள்ளது.



No comments