EThanthi - தமிழ் உலகின் ஐயன் மேனாக தளபதி விஜய் !

Flash News

தமிழ் உலகின் ஐயன் மேனாக தளபதி விஜய் !

மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் மார்வல் நிறுவனத்தின் ‘கேப்டன் மார்வல்' படம் வெளியாகிறது. ஒவ்வொரு நாளும் இந்த படத்திற்கான எதிர் பார்ப்பு கூடிக்கொண்டே போகிறது. ப்ரி லார்சன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை அன்னா போடன் மற்றும் ரயன் ப்லேக் ஆகியோர் இயக்குகிறார்கள். 
தமிழ் உலகின் ஐயன் மேனாக தளபதி விஜய்
இந்த படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்த படம் ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளி வருகிறது. 

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படம் பிரபலப் படுத்தும் விதமாக பிரபல நடிகைகளான காஜல், தமன்னா, சமந்தா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். பிரபல விஜே ரம்யா கேள்விகள் கேட்க, சமந்தா, காஜல், ரகுல் மற்றும் தமன்னா ஆகியோர் பதிலளித்தனர்.

ரகுல் சிங்கிடம், மார்வல் படங்கள் தமிழில் உருவாகினால், ‘ஐயன் மேன்' ஆக நடிக்க எந்த தமிழ் நடிகர் கரக்ட்டாக இருப்பார் என்ற கேள்விக்கு அனைவரை யும் முந்தி கொண்டு ‘தளபதி விஜய்' என காஜல் தக் என கூறினார். சமந்தாவும் விஜய் தான் ஐயன் மேனாக நடிக்க கரக்ட்டாக இருப்பார் என கூறினார். 

ஐயன் மேனுக்கு உரிய குணாதிசங் களான ஸ்வாக், ஸ்டைல், ஹியுமர் சென்ஸ் ஆகியவை விஜய் கிட்ட தான் இருப்பதாக சமந்தா கூறினார். ரகுல், தான் விஜய் உடன் நடித்ததில்லை எனவே எனது ஐயன் மேன் சாய்ஸ் சூர்யா தான் என கூறினார்.
தமிழ் உலகின் ஐயன் மேனாக தளபதி விஜய் ! தமிழ் உலகின் ஐயன் மேனாக தளபதி விஜய் ! Reviewed by EThanthi.in on March 02, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close