EThanthi - கிடைத்த வாய்ப்பை இழந்து விடமாட்டேன் - யோகி பாபு !

Flash News

கிடைத்த வாய்ப்பை இழந்து விடமாட்டேன் - யோகி பாபு !

கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட' படத்தை தொடர்ந்து ரஜினி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க விருக்கிறார். இந்த படத்தில் நகைச்சுவை கதா பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். 
கிடைத்த வாய்ப்பை இழந்து விடமாட்டேன்
இவர் ஏற்கனவே இவர் பேட்ட படத்தில் நடிக்க விருந்தது ஆனால் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது. ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு இருந்தும் நடிக்க முடியாமல் போனது என்று யோகி பாபு வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். 

இது பற்றி சமீபத்தில் யோகிபாபு அளித்துள்ள பேட்டி ஒன்றில்,பேட்ட படத்தில் நடிக்காதது வருத்தமாக சுற்றிக் கொண்டு இருந்தேன். இப்போது இந்த வாய்ப்பு, அந்த வருத்தத்தை போக்கி விட்டது. 

‘சர்கார்' படப்பிடிப்பில் ‘அடுத்து ஒரு நல்ல செய்தி இருக்கு. நாம் பண்ணுவோம்' என்று முருகதாஸ் சார் சொன்னார். அந்த நல்ல செய்தி, ரஜினி சார் படம்னு தெரிந்த போது அவ்வளவு சந்தோ‌ஷம். 

படப்பிடிப்பு தேதிகள் திட்டமிட்டு வருகிறார்கள். இந்த முறை வாய்ப்பை இழந்து விடமாட்டேன்”. இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
கிடைத்த வாய்ப்பை இழந்து விடமாட்டேன் - யோகி பாபு ! கிடைத்த வாய்ப்பை இழந்து விடமாட்டேன் - யோகி பாபு ! Reviewed by EThanthi.in on March 02, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close