EThanthi - கண்ணை கட்டி இசை வாசித்து அசத்திய தமிழகச் சிறுவன் !

Flash News

கண்ணை கட்டி இசை வாசித்து அசத்திய தமிழகச் சிறுவன் !

தன் இசைத் திறமையால் ஏ.ஆர். ரஹ்மானிடம் தம்ஸ்-அப் வாங்கிய 13 வயதான சிறுவன், சென்னையைச் சேர்ந்த லைடியன் நாதஸ்வரம். உலக அரங்கில் ‘வேர்ல்ட்ஸ் பெஸ்ட்' என்னும் நிகழ்ச்சியில் கலக்கிய லைடியன், தற்போது எல்லன் ஷோவில் பங்கேற் றுள்ளார். 
கண்ணை கட்டி இசை வாசித்து அசத்திய தமிழகச் சிறுவன்

உலக பிரசித்து பெற்றது எல்லன் ஷோ. இதில், லைடியன் தன் பியானோ வாசிக்கும் இசைத் திறமையை வெளிப் படுத்தினார். எல்லன் தன் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள வீடியோவில், கண்கள் கட்டியபடி பியானோ வாசித்து அசத்தி யுள்ளான் லைடியன். 

மேலும் தன்னால் ஒரே நேரத்தில் இரு வேறு  பியானோவில் இரு வேறு பாடல்களை வாசிக்க முடியும் எனக் கூறி யுள்ளான் அந்த சிறுவன். 

‘ஒரு பியானோவில் மிஷன் இம்பாசிபில் படத்தின் இசையை வாசித்த படியே, மற்றொரு பியானோவில் ஹாரி பாட்டர் படத்தின் இசையை என்னால் வாசிக்க முடியும்' எனக் கூறிய லைடியன், எல்லன் ஷோவில் கண்ணை துணியால் கட்டியபின் ‘தர்கிஷ் மார்ச்' இசையை பியானோவில் வாசித்து அங்கிருந்த அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினார்.

பியானோ வாசிப்பது மட்டுமின்றி, லைடியனால் கிட்டார், டப்லா, மிருதங்கம் ஆகிய இசைக் கருவி களையும் வாசிக்க முடியும். 2 வயதில் இருந்தே இசை மீது தீரா காதல் கொண்ட லைடியன் முதலில் வாசிக்கத் துவங்கியது ட்ரம்ஸைத் தான். உலக அரங்கில் நம் தமிழ்நாட்டை மேலும் ஒருவர் பெருமை பட  வைத்துள்ளது நம் அனைவருக்கும் ஒரு நற்செய்தி யாகும்.
வீடியோ..
கண்ணை கட்டி இசை வாசித்து அசத்திய தமிழகச் சிறுவன் ! கண்ணை கட்டி இசை வாசித்து அசத்திய தமிழகச் சிறுவன் ! Reviewed by EThanthi.in on March 02, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close