EThanthi - எதார்த்தத்தை பேசும் நேர்மையான படைப்பு - கண்ணே கலைமானே விமர்சனம் !

Flash News

எதார்த்தத்தை பேசும் நேர்மையான படைப்பு - கண்ணே கலைமானே விமர்சனம் !

நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி, வசுந்துரா

இயக்குனர்: சீனுராமசாமி

தயாரிப்பாளர்: உதயநிதி ஸ்டாலின்

பாடல்கள்: யுவன் சங்கர் ராஜா 
கண்ணே கலைமானே

மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடக்கும் மாரியம்மன் கோயில் திருவிழாவில் இருந்து தொடங்குகிறது திரைப்படம். ஹீரோவை காட்ட வேண்டும் என்பதற்காக பிரத்யேக மாக சித்தரிக்கப் பட்ட காட்சிகள் என எதுவும் இல்லாமல் இயல்பான தோற்றத்தில், சாதாரண இளைஞனாக அறிமுக மாகிறார் கமலகண்ணன் ‘உதயநிதி’.

அழிந்து வரும் இயற்கை விவசாய முறையை மீட்டுருவாக்கம் செய்யத் துடிக்கும் வேளாண் படித்த பட்டதாரியாக வலம் வருகிறார். தன்னுடைய சொந்த விவசாய நிலத்திலே இயற்கை உரம் தயாரித்து வினியோகம் செய்கிறார். ஊரில் உள்ள ஏழை விவசாயி களுக்கு வங்கி கடன் பெற்று தருவது போன்ற உதவிகளை செய்கிறார்.

அந்த கிராமத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் வங்கிக்கு மேலாளராக வருகிறார் பாரதி ‘தமன்னா’. நேர்மையான அதிகாரியாக இருக்கும் பாரதி, கிராமத்தில் வங்கிக்கடன் பெற்று திருப்பித் தராதவர்களை அழைத்து எச்சரிக்கும் வேலையில் இறங்குகிறார். 

அதில் கிராம மக்கள் பலருக்கு கமல கண்ணன் வங்கிகடன் பெற்று தந்திருக் கிறார், கடன் பெற்றவர்கள் முறையாக பணம் கட்டாததால் அவரை அழைத்து எச்சரிக்கிறார். இப்படி இரண்டு நேர்மையான மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற போது என்ன நிகழ்கிறது. அவர்கள் எதிர் கொள்ளக் கூடிய சவால்கள் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

காதல், குடும்ப உறவு, ஆண்,பெண் சமத்துவம், போன்ற வற்றை எதார்த்தமாக கூறியிருக் கிறார் இயக்குநர் சீனுராமசாமி. வங்கி மேலாளராக வரும் பாரதி ’தமன்னா’, இதுவரை அவர் ஏற்று நடிக்காத கதா பாத்திரத்தில் நடித்திருக் கிறார். பாரதி என்கிற ஒரு நேர்மையான இயல்பான பெண்ணாகவே அவர் ஒன்றி விடுகிறார். 

பெண்களை கவர்ச்சி பொருளாக, ஆண்களின் கட்டு பாட்டிற்குள் இருக்கும் சமத்துவ மில்லாத கதா பாத்திரங்களை சித்தரிக்கும் இன்றைய சூழலில் இது போன்ற கதாபாத்திரம் தமிழ் சினிமாவிற்கு ஆறுதல் அளிக்கிறது. 

காதலனை உருகி உருகி காதலிப்பது போல் சித்தரிக்கப்பட்ட பெண்ணாக இல்லாமல் எதார்த் தத்தை புரிந்து கொண்டு கடந்து செல்லும் தமன்னாவின் நடிப்பு பாராட்டத் தக்கது.
கண்ணே கலைமானே விமர்சனம்

கமலகண்ணனின் அப்பாவாக வரும் ராமசாமி ‘பூ ராமு’, அப்பத்தாவாக வரும் மூத்த நடிகை வடிவுக்கரசி, கமலகண்ணனின் பள்ளி கால தோழியாக வரும் வசுந்திரா அனைவரும் மனதில் பதியும் அளவிற்கு நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

பெண்கள் மீது திணிக்கப் பட்டிருக்கும் கலாச்சார ஒடுக்கு முறைகளை மெதுவாக உடைக்கிறது சில காட்சிகள். குடும்பங் களுக்குள் ஆண், பெண் சமத்துவம் எப்படி இருக்க வேண்டும் என்பதை சில காட்சிகளில் பார்க்க முடிகிறது. படம் தொடங்கி முதல் பாதிவரை மெதுவாக நகர்கிறது. வேகத்தை சற்று கூட்டி இருக்கலாமோ என்று தோன்றியது. 

இரண்டாம் பாதியில் முதல் பாதியில் முகம் சுளிக்கும் கதா பாத்திரங்களை எல்லாம் கொண்டாட வைக்கிறார். அதற்கான நேர்மையான காரணங் களையும் விளக்குகிறது படம். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளி வந்திருக்கும் பாடல்கள் அனைத்தும் அர்த்த முள்ளதாகவும் அழுத்த மாகவும் உள்ளது. 

ஒலி, ஒளிப்பதிவு நம்மை கிராமத்து சூழலுக்கு இட்டுச் செல்கிறது. நம்பிக்கையை மட்டுமே முதலீடாக வைத்து நேர்மையாக பயணிக்கும் இரண்டு எதார்த்த வாதிகளின் கதை தான் “கண்ணே கலைமானே”. மொத்தத்தில் எதார்த்த வாழ்வியலை பேசும் நேர்மையான படைப்பு.
எதார்த்தத்தை பேசும் நேர்மையான படைப்பு - கண்ணே கலைமானே விமர்சனம் ! எதார்த்தத்தை பேசும் நேர்மையான படைப்பு - கண்ணே கலைமானே விமர்சனம் ! Reviewed by EThanthi.in on March 02, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close