EThanthi - 22 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேரும் ராதிகா - சரத்குமார் !

Flash News

22 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேரும் ராதிகா - சரத்குமார் !

தமிழில் ஏராளமான படங்களில் ராதிகாவும், சரத்குமாரும் நடித்துள்ளனர். இந்த நிஜ ஜோடி திரையில் தங்களுக்கென கொடுக்கப்பட்ட கதா பாத்திரத்திற்கு உயிரூட்டும் விதமாக நடிக்கக் கூடியவர்கள். இவர்கள் இருவரும் “நம்ம அண்ணாச்சி”, “சூர்ய வம்சம்” ஆகிய படங்களில் மட்டுமே கணவன் மனைவியாக நடித்திருந்தனர். 
ராதிகா - சரத்குமார்
தற்போது இவர்கள் இருவரும் இயக்குநர் மணிரத்னம் தயாரிக்க வுள்ள ஒரு படத்தில் மீண்டும் கணவன் மனைவியாக நடிக்க வுள்ளனர். இயக்குநர் மணி ரத்னத்தின் உதவியாளரும், “படை வீரன்” திரைப்படத்தின் இயக்குநரு மான தனா இப்படத்தை இயக்க வுள்ளார். 

இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க வுள்ளது. மேலும் இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் மற்றும் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க வுள்ளனர். 

ராதிகாவும் சரத்குமாரும் கணவன் மனைவியாக நடிக்க வுள்ளனர். இந்த ஜோடி 22 வருடங்களுக்கு பிறகு தற்போது மூன்றாவது முறையாக மணி ரத்னம் படத்தில் இணைந்து நடிக்க வுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
22 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேரும் ராதிகா - சரத்குமார் ! 22 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேரும் ராதிகா - சரத்குமார் ! Reviewed by EThanthi.in on March 04, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close