EThanthi - கம்பிகளுக்கு பின்னால் கார்த்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

Flash News

கம்பிகளுக்கு பின்னால் கார்த்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

‘தேவ்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கார்த்தி நடித்து வரும் படம் கார்த்தி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்தப் படத்தைத் தயாரிக் கின்றனர். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். 
கம்பிகளுக்கு பின்னால் கார்த்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (மார்ச் 8) ரிலீஸாகி யுள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளி யிட்டுள்ளது படக்குழு. சிறைச் சாலைச் சுவரில் கார்த்தியின் முகம் வரையப் பட்டிருக்க, அதில் ரத்த கோடுகள் வழிவது போன்று இருக்கிது பர்ஸ்ட் லுக் போஸ்டர். 

இந்தப் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. இதில், அவருக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்' தெலுங்குப் படத்தில் நடித்த ராஷ்மிகா மண்டன்னா நடிக்கிறார். 
மேலும் கார்த்தி நடிக்கும் கைதி திரைப்படம் ஒரே இரவில் நடைபெறும் கதை தான் என்பதால் விரைவில் இப்படம் எடுத்து முடிக்கப்பட்டு திரைக்கு வர விருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கம்பிகளுக்கு பின்னால் கார்த்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு ! கம்பிகளுக்கு பின்னால் கார்த்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு ! Reviewed by EThanthi.in on March 09, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close