பிரபல இயக்குநர் லெனின் மரணம் - திரையுலகம் அஞ்சலி !
கேரளாவை சேர்ந்த இடதுசாரி சிந்தனையாளர் இயக்குநர் லெனின் ராஜேந்திரன். இவர் எழுத்தாளரா கவும், இயக்குநரா கவும் பன்முகத் தன்மையோடு இயங்கியவர்.
இவர் 1982 ஆம் ஆண்டு இவர் “வேனல்” திரைப் படத்தின் மூலம் திரைத் துறையில் அறிமுக மானார்.
அதைத் தொடர்ந்து மழா,தெய்வத்தின் விக்ரிதிகள், மகரம் அன்னியர் உட்பட 14 படங்கள் இயக்கி யுள்ளார்.
தெய்வத்தின் விக்ரிதிகள் திரைப் படத்திற்காக 1992 ம் ஆண்டு கேரள அரசின் சிறந்த திரைப் படத்திற்கான விருதை பெற்றார்.
1996 -ம் ஆண்டு குழம் என்ற படத்திற் காகவும் விருது பெற்றுள்ளார்.
இறுதியாக இவர் இயக்கத்தில் கடந்த 2016 - ம் ஆண்டு எடவப்பாதி என்ற திரைப்படம் வெளியானது. மனைவி ரமணி, மகள் பார்வதி மகன் கெளதமனுடன் திருவனந்த புரத்தில் வசித்து வந்த இவர் கடந்த நவம்பர் மாதம் நுரையீரல் கோளாறு காரணமாக சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். லெனின் ராஜேந்திரனின் இழப்பு கேரள திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.



No comments