EThanthi - மோடிக்கு கண்டனம் தெரிவித்த சித்தார்த் - புல்வாமா தாக்குதல் !

Flash News

மோடிக்கு கண்டனம் தெரிவித்த சித்தார்த் - புல்வாமா தாக்குதல் !

புல்வாமா தாக்குதலை அரசியலாக்கு வதை நிறுத்துங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். புல்வாமா தாக்குதல் ஒவ்வொரு பாஜக பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பேசி வருகிறார். 
மோடிக்கு கண்டனம் தெரிவித்த சித்தார்த்

பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய அன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போதும், இந்த மண்ணுக் காக நான் சபதம் ஏற்றுள்ளேன். இந்த மண் வீழ நான் விடமாட்டேன். இந்த நாடு செயல் படாமல் நின்று போகவும் அனுமதிக்க மாட்டோம். நாடு வளைந்து போகவும் அனுமதிக்க மாட்டேன். 

எனது தாய் நாட்டுக்கு நான் அளிக்கும் உறுதி இது. உங்கள் தலை பிறரை வணங்கும் வகையில் விட மாட்டேன். நமது ராணுவ வீரர்களுக்கு எனது வணக்கங்கள் என்று கூறியிருந்தார். மேலும், நான் பயங்கர வாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். எதிர்க் கட்சிகளோ என்னை ஒழித்துக்கட்ட சதி செய்கின்றன என்று அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் தொடர் பேச்சு குறித்து டிவிட்டரில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கூறியிருப்ப தாவது- இந்திய மக்கள் பாதுகாப்புப் படையினர் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். 

ராணுவம் தாக்குதல் நடத்தியதை மக்கள் நம்புகின்றனர்.உங்களையும் (மோடி), உங்களுடைய கூட்டத்தையும் தான் அவர்கள் நம்பவில்லை. புல்வாமா தாக்குதலை அரசியலாக்கு வதை நிறுத்துங்கள். உண்மையான ஹீரோக்களு க்கு முன் நின்று கொண்டு, ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள். 

பாதுகாப்புப் படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள் இவ்வாறு சித்தார்த் கூறியுள்ளார். 

இந்த விவகாரத்தில் இந்தியா தாக்குதல் நடத்தியிருப் பதற்கான ஆதாரங்களை எதிர்க் கட்சிகள் கேட்டு வரும் நிலையில், சித்தார்த்தின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மோடிக்கு கண்டனம் தெரிவித்த சித்தார்த் - புல்வாமா தாக்குதல் ! மோடிக்கு கண்டனம் தெரிவித்த சித்தார்த் - புல்வாமா தாக்குதல் ! Reviewed by EThanthi.in on March 04, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close