EThanthi - பத்து வருஷமா? நீங்க மாறல அப்பா - ஏ.ஆர்.ரஹ்மான் மகள் !

Flash News

பத்து வருஷமா? நீங்க மாறல அப்பா - ஏ.ஆர்.ரஹ்மான் மகள் !

ஏ.ஆர்.ரஹ்மான் 10 வருடங்களுக்கு முன் 2009 -ல் `ஸ்லம் டாக் மில்லினியர்' படத்தின் இசைக்கா கவும் பாடலுக்கா கவும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமைத் தேடிதந்தார். இதைக் கொண்டாடும் விதமாக `ஸ்லம் டாக் மில்லினியர்' படத்தின் 10-ம் ஆண்டு விழா மும்பை தாராவி பகுதியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான்
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏ.ஆர் ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா ரஹ்மானுடன் உரையாடுவதுபோல் அமைக்கப் பட்டிருந்தது. அப்போது பேசிய கதிஜா, `அப்பாவை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு. இந்தப் பெருமைக்குக் காரணம் அவரோட உலகப் புகழ் இல்ல. அவருக்கு நல்லா வர்ற இசையில்லை.

அப்பா எங்க மூணு பேருக்கும் சொல்லிக் கொடுத்திருக்க நற்பண்புகளுக் காக அவரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். ரெண்டு ஆஸ்கர் வாங்கிட்டு வந்து பத்து வருஷமாச்சு. இன்னும் அப்பா அதே ரஹ்மானாகத் தான் இருக்காரு. அணு அளவும் அவர் மாறல. அப்போ எப்படி இருந்தாரோ அதே மாதிரி தான் இருக்கீங்க. என்ன எங்கக்கூட இருக்க நேரம் மட்டும் குறைஞ்சிருக்கு.
ரஹ்மான்
சினிமா மட்டு மல்லாமல், தனிப்பட்ட முறையிலும் அப்பா சிறந்து விளங்கினார். ஒருத்தருக்கு உதவி செஞ்சார்னா கூட மூணாவது ஆள் சொல்லித் தான் சில விஷயம் எனக்குத் தெரிய வரும். வலதுகை கொடுத்த இடது கைக்குத் தெரியக் கூடாதுங்கிற மொழிக்கு எடுத்துக் காட்டானவர்’ என்றார்.

நாங்க எங்களோட வேலைகளு க்குப் போகப்போறோம் எங்களுக்கு நீங்க கொடுக்கிற அட்வைஸ் என்னவென்று கேட்டார். அதற்குப் பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான் `நான் யாருக்கும் அட்வைஸ் பண்ணமாட்டேன். உங்க மனசு சொல்றத கேளுங்க. எங்க அம்மா எனக்குச் சொல்லித் தந்ததை நான் உங்களுக்குச் சொல்லித் தரணும். உங்க மனசுதான் உங்களுக்கான சிறந்த வழிகாட்டி’’ என்றார்.
பத்து வருஷமா? நீங்க மாறல அப்பா - ஏ.ஆர்.ரஹ்மான் மகள் ! பத்து வருஷமா? நீங்க மாறல அப்பா - ஏ.ஆர்.ரஹ்மான் மகள் ! Reviewed by EThanthi.in on February 11, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close