EThanthi - நடிகை சந்தியாவின் ஃப்ளாஷ்பேக் - வெளிவராத உண்மைகள் !

Flash News

நடிகை சந்தியாவின் ஃப்ளாஷ்பேக் - வெளிவராத உண்மைகள் !

சென்னையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சந்தியா, பாலகிருஷ்ணன் குறித்து தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர்களின் கடந்த கால வாழ்க்கையில் பல கசப்பான சம்பவங்கள் நடந்ததாக சந்தியா, பால கிருஷ்ணனுடன் பழகியவர்கள் நம்மிடம் கூறினர்.
நடிகை சந்தியா
`குமரி மாவட்டம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி அருகில் உள்ள தெரிசனங்கோப்பு, ஞாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா. குடும்ப வறுமையின் காரணமாகப் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தினார். இவருக்கு ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் உள்ளனர்.

அவரின் அப்பா டீக்கடை நடத்தி வருகிறார். அம்மா பிரசன்ன குமாரி, குடும்பத் தலைவி. கிராமத்தில் எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழகும் சந்தியா, அழகாகவும் இருப்பார். ஒருபக்கம் வறுமை வாட்டினாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு சிறுவயது முதல் இருந்தது.

அதற்கான வாய்ப்புத் தேடிய சமயத்தில் தான் அவரின் போட்டோவை பாலகிருஷ்ணன் பார்த்துள்ளார். அப்போது சந்தியாவுக்கு 15 வயது. அதன் பிறகு சந்தியாவை பாலகிருஷ்ணன் காதலித்துள்ளார். பெற்றோர் சம்மதத்துடன் 13.11.2000-ம் ஆண்டில் சந்தியாவுக்கு 18 வயது கூட பூர்த்தி யடையாத சூழலில் அவரை பாலகிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்து க்குப் பிறகு கணவனும் மனைவியும் தூத்துக்குடி டூவிபுரம், 5வது தெருவில் உள்ள சொந்த வீட்டின் மாடியில் குடியிருந்தனர். 15 வயதுக்கு மேல் வித்தியாசம் என்றாலும் இவர்களின் இல்லற வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாகச் சென்றது. டூவிபுரத்தில் உள்ளவர் களிடம் சந்தியா சகஜமாகப் பேசினார்.

அப்போது தான் தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் மாவட்டச் செயலாளராகப் பால கிருஷ்ணன் நியமிக்கப் பட்டார். பள்ளியில் படிக்கும்போதே சினிமாவின் மீது பைத்தியமாக இருந்தவர் பால கிருஷ்ணன். இதனால் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு இருந்தார்.

அவரின் அப்பா, அரசு ஊழியர் என்பதால் சொந்தமாக சில வீடுகள் இருந்தன. அதை வாடகைக்கும் விட்டிருந்தனர். இதனால் பாலகிருஷ்ணன் வேலைக்குச் சென்றுதான் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இதற்குள் இரண்டு குழந்தைக்குத் தாயாகி விட்டார் சந்தியா. இந்தச் சூழ்நிலையில் தான் வார்டு கவுன்சிலர் தேர்தலில் சந்தியாவை நிறுத்தினார்

பாலகிருஷ்ணன். அப்போதுதான் சந்தியாவின் வாழ்க்கை திசைமாறியது. தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் சந்தியாவுக்கு தூத்துக்குடி யில் நண்பர்கள் அதிகமாகினர். அவர்களுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசத் தொடங்கி யிருக்கிறார். இது, கணவன் மனைவிக்கு இடையே பிரச்னையை ஏற்படுத்தி யுள்ளது.
பாலகிருஷ்ணன்
கணவர் வீட்டில் நடந்த சில கசப்பான சம்பவங்களால் தாய் வீட்டுக்குச் சென்று விட்டார் சந்தியா. அவரை சமாதானப் படுத்தி தூத்துக்குடிக்கு அழைத்து வருவது வாடிக்கை யானது. இந்தச் சூழ்நிலையில் தான் பாலகிருஷ்ணன், `காதல் இலவசம்' என்ற படத்தை சந்தியா கிரியேஷன்ஸில் தயாரித்து இயக்கினார்.

அந்தப் படம் வெற்றி பெறவில்லை. அதோடு நிதி நெருக்கடியில் பாலகிருஷ்ணன் தவித்துள்ளார். கடன் சுமை, குடும்ப பிரச்னை காரணமாக பாலகிருஷ்ணன் சென்னையிலேயே செட்டிலாகி விட்டார். குழந்தைகளைப் பார்க்க தூத்துக்குடிக்கு வருவார்.

இதற்கிடையில் அரசியலுக்கு முழுக்குப் போட்டு விட்டு சென்னைக்குச் சென்ற பாலகிருஷ்ணன், சினிமா இயக்கத் திலேயே ஆர்வம் காட்டி வந்துள்ளார். சினிமா வாய்ப்புகளும் எதிர் பார்த்தபடி வரவில்லை. சென்னை ஜாபர்கான் பேட்டை, பாரிநகர், காந்தி தெருவில் வாடகைக்கு கடந்த ஓராண்டாகக் குடியிருந்தார்.

பாலகிருஷ்ணன் சென்னைக்கு வந்த பிறகு சில மாதங்கள் சென்னை, நாகர்கோவில் எனக் குடியிருந்து வந்தார் சந்தியா. பாலகிருஷ்ணனின் கொடுமையைத் தாங்க முடியவில்லை எனக் கூறி கதறிய சந்தியா, சில மாதங்களுக்கு முன் விவாகரத்து கேட்க முடிவு செய்து பால கிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இவர்கள் இருவரின் விவகாரமும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த போது கவுன்சலிங் அளிக்கப் பட்டுள்ளது. பால கிருஷ்ணனை விட்டு விலகிய சந்தியா, சென்னையில் உள்ள மகளிர் விடுதியில் தனியாகத் தங்கியிருந்து சினிமா வாய்ப்புகளைத் தேடிவந்தார்.

சந்தியாவின் நட்பு வட்டாரத்தைத் தவறாகப் பாலகிருஷ்ணன் எண்ணியதே அவர்களின் வாழ்க்கையில் விரிசல் ஏற்படக் காரணமானது. சந்தியா எப்போதும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அதோடு விதவிதமாக டிரஸ்களை அணிவார். சினிமா துறையி லிருக்கும் பால கிருஷ்ணனுக்கு அது ஏன் பிடிக்கவில்லை.

சின்னச் சின்ன விரிசல், பூதாகரமாக வெடித்து சந்தியாவைக் கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளது. சந்தியாவைக் கொலை செய்த வழக்கில் பால கிருஷ்ணனை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி பார்சலாகக் கட்டி அடையாற்றி லும் குப்பைத் தொட்டிகளிலும் பால கிருஷ்ணன் வீசியதாகப் போலீஸார் கூறுகின்றனர்.
அந்தளவுக்குக் கொடூர மனம் படைத்த பால கிருஷ்ணனை நாங்கள் பார்த்ததில்லை. சந்தியாவுக்கு இப்படியொரு நிலைமை ஏற்படும் என்று நாங்கள் கனவில்கூட நினைக்க வில்லை’’ என்றனர்.

சந்தியாவின் செல்போன் குறித்து பாலகிருஷ்ணனிடம் போலீஸார் விசாரித் துள்ளனர். அந்த செல்போனில் சந்தியா கொலை செய்யப் படுவதற்கு முன் நடந்த சம்பவங்கள் குறித்த தடயங்கள் இருப்பதாகப் போலீஸாரு க்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையில் பால கிருஷ்ணனின் செல்போனை ஆய்வு செய்த போலீஸார் அதிலிருந்தும் சில முக்கிய தகவல்களைச் சேகரித்துள்ளனர். சந்தியாவின் செல்போன் நம்பரைக் கொண்டு அவர் யார், யாருடன் பேசினார் என்ற விவரங்களைச் சேகரித்துள்ளனர்.

தூத்துக்குடி யில் சந்தியா வாழ்ந்த கால கட்டங்களில் அவருடன் நண்பர்களாக இருந்தவர்கள் குறித்த பட்டியலும் போலீஸாரிடம் உள்ளது. அதில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் தொடங்கி அரசியல் பிரமுகர்கள் வரை உள்ளனர். தூத்துக்குடி மத்திய போலீஸ் நிலையத்தில் சந்தியா விவகாரம் பஞ்சாயத்தில் முடிந்த கதையும் இருக்கிறது.
நடிகை சந்தியாவின் ஃப்ளாஷ்பேக்
சந்தியாவின் நண்பரான மெக்கானிக் ஷாப் ஓனரை போலீஸார் கவனித்த சம்பவம் இன்னமும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதோடு திராவிடக் கட்சியைச் சேர்ந்த சுள்ளான், புல்லட் பாண்டி என்ற அடைமொழிகளோடு அழைக்கப்படும் இளைஞர் ஒருவருடன் சந்தியாவுக்கு நட்பு இருந்துள்ளது.

சந்தியாவைக் கொலை செய்த பிறகு, அன்றைய இரவு அதே வீட்டில் இருந்துள்ளார் பாலகிருஷ்ணன். அதாவது சந்தியாவின் சடலத்தோடு தங்கி யிருந்துள்ளார் பாலகிருஷ்ணன். சந்தியாவின் உடலைத் துண்டு துண்டாக வெட்டுவதற்கு முன் பால கிருஷ்ணனின் போனில் இருந்து சில அழைப்புகள் சென்றதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அவர்கள் யார் யார் என்பதை போலீஸார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே, சந்தியாவின் தலை, இடுப்புக்கு மேல் உள்ள பகுதிகளைப் பெருங்குடி குப்பை கிடங்கில் 2வது நாளாக இன்றும் 6 ஜே.சி.பி இயந்திரங் களைக் கொண்டு துப்பரவுப் பணியாளர் களுடன் போலீஸார் தேடி வருகின்றனர்.

சந்தியாவின் தலை விவகாரம் பள்ளிக்கரணை போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி யுள்ளது. டன் கணக்கில் கொட்டப்பட்ட குப்பையில் சந்தியாவின் தலையைக் கண்டறிவது என்பது சாதாரண விஷயமல்ல. சந்தியாவின் தலை மற்றும் இதர உடல் பாகங்கள் கிடைத்த பிறகுதான் தனிப்படை போலீஸார் நிம்மதி பெரு மூச்சுவிட முடியும்.
நடிகை சந்தியாவின் ஃப்ளாஷ்பேக் - வெளிவராத உண்மைகள் ! நடிகை சந்தியாவின் ஃப்ளாஷ்பேக் - வெளிவராத உண்மைகள் ! Reviewed by EThanthi.in on February 09, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close