EThanthi - செளந்தர்யாவுக்கு மெஹந்தி போட்ட நஃப்லா குஷி சந்தோசத்தில் !

Flash News

செளந்தர்யாவுக்கு மெஹந்தி போட்ட நஃப்லா குஷி சந்தோசத்தில் !

செளந்தர்யா திருமணம் விசாகனுடன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. மருதாணி சிவந்த தன் கைகளை தன் மகன் வேத்க்கு சௌந்தர்யா காண்பிப்பது போன்ற புகைப்படமும் மெஹந்தி போட்டுக் கொண்ட புகைப் படங்களும் இணையத்தில் பரவலாகக் காண முடிகிறது. 
செளந்தர்யா திருமணம்
செளந்தர்யாவுக்கு மெஹந்தி டிசைன் செய்து விட்டவர் சென்னையைச் சேர்ந்த நஃப்லா. என்னோட சோஷியல் மீடியா பேஜ்ல என் மெஹந்தி டிசைன்களைப் பதிவு செய்றது வழக்கம். 

அதைப் பார்க்கிற செலிபிரெட்டிகள் என்னை அவங்க வீட்டு பங்ஷனுக்குக் கூப்பிடுவாங்க. அப்படித்தான் ஒருநாள் செளந்தர்யா ரஜினிகாந்த் மேடமும் கூப்பிட்டாங்க. அவங்க அழைப்பை என்னோட உழைப்புக்குக் கிடைச்ச மரியாதையா எடுத்துக்கிட்டேன். மொத்தத்துல சந்தோஷத்துல திக்குமுக்காடிப் போயிட்டேன். 
நஃப்லா குஷி
அவங்க வீட்டுக்குப் போனப்ப ரஜினி சாரை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. அவரோட புகைப்படம் எடுத்துக்கிட்டேன்’’ என்றவர் செளந்தர்யா கையில் வரைந்துவிட்ட மெஹந்தி டிசைன் பற்றிப் பேசினார். சிவன், ஆண்டாள் இருக்கிற மாதிரியான ஆன்மிக டச், மணமக்களோட இனிஷியல் இருக்கணும்ங்கிறது செளந்தர்யா மேடமோட சாய்ஸ். 

அதுக்கேத்த மாதிரி சிவனை குறிக்கிற சூலமும், ஆண்டாளைக் குறிக்கிற தாமரையையும் டிசைனா வரைஞ்சு அதுல மணமக்களோட பேரான V.S எழுத்தை எழுதி செளந்தர்யா மேடத்துக்கிட்ட காட்டினேன். அவங்களும் என் டிசைனைப் பார்த்துட்டு உடனே ஓகே சொல்லிட்டாங்க. ரொம்ப நுணுக்கமான டிசைன்ங்கிறது னால அதை வரைய சில மணி நேரம் ஆனது. 
செளந்தர்யாவுக்கு மெஹந்தி
மெஹந்தி போட்டுக்கிட்ட குடும்ப ஆள்கள் எல்லோருக்கும் V.S என்ற எழுத்துகளை அடிப்படையாக வைச்சு யுனிக்கான டிசைனில் மெஹந்தி வரைந்தோம். செளந்தர்யா மேடத்தோட கையில மெஹந்தியைப் பார்த்ததும் அவங்க பையன் வேத் ரொம்ப ஹேப்பி ஆகிட்டார்'' என்றார் சந்தோஷமாக.
செளந்தர்யாவுக்கு மெஹந்தி போட்ட நஃப்லா குஷி சந்தோசத்தில் ! செளந்தர்யாவுக்கு மெஹந்தி போட்ட நஃப்லா குஷி சந்தோசத்தில் ! Reviewed by EThanthi.in on February 11, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close