EThanthi - இந்த ஆண்டு அனிஷாவுடன் விஷால் திருமணம் !

Flash News

இந்த ஆண்டு அனிஷாவுடன் விஷால் திருமணம் !

நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டியின் மகள் அனிஷாவை திருணம் செய்ய இருப்பதாகவும், நிச்சய தார்த்தம் முடிந்து விட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், மவுனமாக இருந்த விஷால், தற்போது இதுப்பற்றி மனம் திறந்துள்ளார். 
இது குறித்து அவர் கூறியிருப்ப தாவது: 

அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருப்பது உண்மை தான். இது தொடர்பாக இரு குடும்பத்தினரும் பேசிக் கொண்டிருக் கிறார்கள். நிச்சய தார்த்தம் எதுவும் நடைபெற வில்லை. நிச்சய தார்த்தம், மற்றும் திருமண தேதிகளை குடும்பத்தினர் முடிவு செய்வார்கள். 
இது காதல் திருமணம் அல்ல. பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம். நான், ஏற்கெனவே சொன்ன மாதிரி நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில் தான் திருமணம் நடக்கும். 

இன்னும் ஒரு சில மாதங்களில் கட்டட பணிகள் முடிந்து விடும் அதன் பிறகு திருமணம் நடக்கும். திருமணம் பற்றிய விபரங்களை விரைவில் முறைப்படி சொல்கிறேன். என்று கூறி யிருக்கிறார்.
இந்த ஆண்டு அனிஷாவுடன் விஷால் திருமணம் ! இந்த ஆண்டு அனிஷாவுடன் விஷால் திருமணம் ! Reviewed by EThanthi.in on January 16, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close