EThanthi - விஷால் திருமணம் செய்ய போகும் பெண் !

Flash News

விஷால் திருமணம் செய்ய போகும் பெண் !

நடிகர் விஷால் ஐதராபாத் தொழிலதிபர் விஜய் ரெட்டியின் மகள் அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய இருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. முதலில் இதனை மறுத்த விஷால், "இது தவறான செய்தி" என்றார். பின்னர், "நானும் அனிஷாவும் காதலித்தோம்.
எங்கள் காதலை இரு குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். திருமண செய்தியை முறைப்படி அறிவிப்பேன்" என்றார். இந்த நிலையில் விஷால் அனிஷாவுடன் இருக்கும் படங்கள் வெளியாகி இருக்கிறது. 
இது விஷால் தரப்பிலிருந்தே கசிய விடப்பட்டிருக்கிறது. அதில் விஷாலும், அனிஷாவும், ஹீரோ, ஹீரோயின் போன்று போஸ் கொடுத்துள்ளனர். 

ஏப்ரல் மாதம் இவர்கள் திருமணம் தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தில் நடக்க இருக்கிறது. நடிகர் சங்க கட்டட திறப்பு விழாவும், விஷால் திருமண விழாவும் ஒரே நாளில் நடக்கும் என்று தெரிகிறது.
விஷால் திருமணம் செய்ய போகும் பெண் ! விஷால் திருமணம் செய்ய போகும் பெண் ! Reviewed by EThanthi.in on January 16, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close