மகத் நடிக்கும் புதிய படம் - கெட்டவனா... நல்லவனா...?
'பிக் பாஸ்' டி.வி., நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் ஆனவர் மகத். இப்போது, அவர் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை பிரபு ராம் இயக்கி வருகிறார்.
பெயரிடப்படாமல் இருந்த அந்தப் படத்துக்கு இப்போது பெயரிடப் பட்டிருக்கிறது. 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா' என, மகத் நடிக்கும் புதிய படத்துக்கு பெயர் சூட்டி உள்ளனர்.
அதற்கான பர்ட்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் மகத்.
படத்தில், நடிகர் சிம்புவின் தீவிர ரசிகராக இருக்கிறார் மகத்.
அதை வைத்து, 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா' படத்துக்கான கதையை தயார் செய்துள்ளனர். படத்தின் படபிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.



No comments