EThanthi - நெட்பிளிக்ஸில் நீக்கப்பட்ட இந்திய வம்சாவளி நடிகரின் எபிசோட் - சவுதி விமர்சித்ததா?

Flash News

நெட்பிளிக்ஸில் நீக்கப்பட்ட இந்திய வம்சாவளி நடிகரின் எபிசோட் - சவுதி விமர்சித்ததா?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஹசன் மின்ஹாஜ்ஜின் நிகழ்ச்சி ஒன்றில் சவுதி அரசை விமர்சித்த காரணத்துக் காக அவரது நிகழ்ச்சி ஏபிசோட்கள் நீக்கப் பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து இந்த நீக்கம், கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தடை என்று ஹாலிவுட் உலகில் விமர்சனங்கள் எழ தொடங்கி உள்ளன.

அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஹசன் மின்ஹஜ் “Patriot Act,” என்ற புதிய நிகழ்ச்சி ஒன்று நெட்பிளிக்ஸில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சவுதி அரசை விமர்சித்தும், சவுதி பத்திரிகை யாளர் ஜமாலின் கொலை குறித்தும் சித்தரிக்கப் பட்டுள்ளதாக சவுதி குற்றச் சாட்டியது. இதனைத் தொடர்ந்து சவுதி அரசின் அழுத்தம் காரணமாக அந்த காட்சிகள் நீக்கப் பட்டன.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஹசன் மின்ஹன் ஆதரவாகவும், சவுதி அரேபியா கருத்துரிமையை பறிப்பதாக வும் பலரும் குரல் எழுப்பி உள்ளனர்.

காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம், ”நாங்கள் கலைஞர்களின் சுதந்திரத்து க்கு முழு ஆதரவு அளிக்கிறோம். ஆனால் சவுதியின் சட்ட ரீதியான வேண்டுகோளை அடுத்தே அந்தக் காட்சிகள் நீக்கப் பட்டுள்ளன” என்று விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு முன்னர் ஹசன் மின்ஹஜ் அமெரிக்க அதிபர் ட்ரம்பையும் விமர்சிருந்தது குறிப்பிடத் தக்கது. 

யார் இந்த ஹசன் மின்ஹஜ்? 

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தை பூர்வீக மாகக் கொண்ட அமெரிக்கா வாழ் முஸ்லிமான ஹசன் மின்ஹஜ் அமெரிக்கா வில் ’தி டெய்லி ஷோ’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
நெட்பிளிக்ஸில் நீக்கப்பட்ட இந்திய வம்சாவளி நடிகரின் எபிசோட் - சவுதி விமர்சித்ததா? நெட்பிளிக்ஸில் நீக்கப்பட்ட இந்திய வம்சாவளி நடிகரின் எபிசோட் - சவுதி விமர்சித்ததா? Reviewed by EThanthi.in on January 05, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close