லட்சுமி பாய் வேடத்தில் நடிக்க அர்ப்பணிப்பு தேவை - கங்கனா ரனாவத் !
ராணி லட்சுமி பாய் வேடத்தில் நடிக்க நிறைய நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் தேவைப்பட்டது என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித் துள்ளார். ராணி லட்சுமி பாய் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘மணிகர்ணிகா’ என்ற இந்திப் படம் தயாராகியுள்ளது.
இந்தப் படத்தில் ராணி லட்சுமி பாயாக பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அத்துடன், ராதா கிருஷ்ணா ஜகர்லமுடியுடன் இணைந்து படத்தை இயக்கியும் உள்ளார்.
இந்தியில் இந்தப் படம் தயாராகி யிருந்தாலும், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றிலும் டப் செய்து வெளியிடப் படுகிறது. எனவே, படத்தின் தயாரிப்பாளர் கமல் ஜெயின் மற்றும் கங்கனா இருவரும் சென்னையில் பத்திரிகை யாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய கங்கனா, “தேசபக்தி பற்றிய ஒரு கதையில் நான் நடிக்கும் முதல் படம் இது. 12 வருடங்களாக இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்க வில்லையே என வருத்தம் இருந்தது.
இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகளான விஜயேந்திர பிரசாத், டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி உட்பட பல முக்கியமான திறமை யாளர்களுடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப் படம் தொடங்கியபோது என் உடல் எடை 50 கிலோ. மிகவும் ஒல்லியாக இருந்தேன். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது, என்னுடைய உடல் அதற்கு உகந்ததாக இல்லை என என் சண்டைப் பயிற்சியாளர் கூட சொன்னார்.
தினமும் 10-12 மணி நேரம் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது சிரமமாக இருந்தது. ஆக்ஷன் காட்சிகள்தான் முதலில் எடுக்கப் பட்டன. அதன்பிறகு தான் ட்ராமா காட்சிகளை நான் இயக்கினேன்.

இந்தப் படத்துக்காக நிறைய நேரம் எழுத்தாளர் களுடன் செலவு செய்தேன், அது எனக்கு உதவியாக இருந்தது. காட்சிகளைப் படம்பிடிப்பது எளிதாக இருந்தது.
ஆனால், எந்தக் காட்சியை எடுக்க வேண்டும் என்று தயாராவது தான் சவாலாக இருந்தது.
ராணி லட்சுமி பாய் கதாபாத்திரம், வழக்கமான ஒரு கதாபாத்திரம் அல்ல. அதைச் செய்ய எனக்கு நிறைய நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் தேவைப் பட்டது. அனைத்து மொழி மக்களையும் இந்தக் கதை சென்றடையும் என நம்புகிறேன்” என்றார்.

No comments