EThanthi - பேட்ட படத்தை தொடர்ந்து அடுத்த படத்துக்கு தயாரான ரஜினி !

Flash News

பேட்ட படத்தை தொடர்ந்து அடுத்த படத்துக்கு தயாரான ரஜினி !

'பேட்ட' படத்தைத் தொடர்ந்து மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க வுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, சிம்ரன், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்தகி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட்ட'. 
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 10-ம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி யுள்ளது. 'பேட்ட' படத்தின் ட்ரெய்லருக்கு பலருமே, பழைய ரஜினியின் ஸ்டைலைக் கொண்டு வந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ் என்று தெரிவித்தார்கள். 
அவர்கள் இப்போது மேலும் குஷியாகி யுள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடிக்க வுள்ளார். 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வுள்ளார். 
இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் படத்தைத் தொடர்ந்து, மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித் துள்ளார் ரஜினி.

'பேட்ட' படப்பிடிப்பு க்கு இடையே, கார்த்திக் சுப்பராஜ் கூறிய இன்னொரு கதை பிடித்து விடவே, அதனை முழுமையாக உருவாக்க கூறியுள்ளார் ரஜினி. இதனால், மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது கிட்டதட்ட உறுதியாகி யுள்ளது.
பேட்ட படத்தை தொடர்ந்து அடுத்த படத்துக்கு தயாரான ரஜினி ! பேட்ட படத்தை தொடர்ந்து அடுத்த படத்துக்கு தயாரான ரஜினி ! Reviewed by EThanthi.in on January 05, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close