விஜய் சேதுபதியை ’மகா நடிகன்’ என்று பாராட்டிய சூப்பர் ஸ்டார் !
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி யுள்ள படம் ‘பேட்ட’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜித்து என்ற கேரக்டரில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ‘‘நம்ம படத்தில் வில்லன் கேரக்டர் யார் பண்ணுறாங் கன்னு கார்த்திக் சுப்புராஜ் கிட்ட கேட்டேன்.
அவர் விஜய் சேதுபதி பெயரை சொன்னார். அவர் இதற்கு சம்மதிப்பாரா என்றேன்.
அதற்கு அவர் ஒப்புக் கொண்டதாக கார்த்திக் கூறினார் விஜய் சேதுபதி யுடன் இணைந்து
நடித்த பிறகு தான் தெரிந்தது அவர் சாதாரண நடிகன் இல்லை ஒரு மகா நடிகன் என்று.
விஜய் சேதுபதி நல்ல நடிகன் மட்டுமில்ல. நல்ல மனிதனும் கூட. அவரோட பழகும் போது தான் அவரோட நல்ல மனசு தெரிஞ்சுது.
அவரோட பேச்சு, சிந்தனை, செயல் எல்லாமே வித்தியாசமா இருக்கு’’ என்றார் ரஜினிகாந்த்.



No comments