EThanthi - அஜித், சிவாவுடன் தொடர்ந்து இணைய காரணம்? பாடலாசிரியர் கூறிய பதில் !

Flash News

அஜித், சிவாவுடன் தொடர்ந்து இணைய காரணம்? பாடலாசிரியர் கூறிய பதில் !

அஜித் தற்போது ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்கி யுள்ளார். 

இந்தப் படம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நான்காவது படம். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. 

அதே தினத்தில் ரஜினியின் ‘பேட்ட’ படமும் போட்டியாக வெளியா கிறது.

‘விஸ்வாசம்’ படம் மூலம் அஜித்தும் சிவாவும் நான்காவது முறையாக இணைந் துள்ளனர். 

இதுவரை நடிகர் அஜித் எந்த இயக்குனருடனும் இவ்வளவு நட்பாக பழகியது கிடையாது. 

இதற்கு என்ன காரணம் என்பதை இப்படத்தின் பாடாலாசிரியர் விவேகா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி யுள்ளார்.

‘‘இயக்குனர் சிவாவுடன் ‘சிறுத்தை’ படத்தில் இருந்து பாட்டெழுதி வருகிறேன். சிவா ரொம்ப நல்ல மனிதர். 

அவரை அனைவரு க்கும் பிடிக்கும். ‘சிறுத்தை’ படம் வெளியான நாட்களில் இருந்து தற்போது வரை அவர் அப்படியே உள்ளார். 

அதனால் தான் அஜித் சாருக்கு அவரை பிடித்துள்ளது. இயக்குனர் சிவாவுக்கு தமிழ் மீது பற்று அதிகம். 

பாடல்கள் எழுதுவதில் எனக்கு முழு சுதந்திரம் அளிப்பார் சிவா’’ என்றார் விவேகா.
அஜித், சிவாவுடன் தொடர்ந்து இணைய காரணம்? பாடலாசிரியர் கூறிய பதில் ! அஜித், சிவாவுடன் தொடர்ந்து இணைய காரணம்? பாடலாசிரியர் கூறிய பதில் ! Reviewed by EThanthi.in on December 10, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close