EThanthi - தன் காதலரை கரம் பிடிக்கும் நடிகை சாந்தினி !

Flash News

தன் காதலரை கரம் பிடிக்கும் நடிகை சாந்தினி !

இயக்குநர் கே.பாக்யராஜ் மகன் சாந்தனுவு க்கு `சித்து பிளஸ் 2’ படத்தில் ஜோடியாக நடித்தவர் சாந்தினி. 
வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி உள்ளிட்ட 

தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கும் வில் அம்பு, இரும்புத்திரை, பியார் பிரேமா காதல் உள்ளிட்ட பல படங்களில் 

நடன இயக்குநராக பணிபுரிந்த நந்தா என்பவரு க்கும் காதல் ஏற்பட்டது. 
இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமண நிச்சய தார்த்தம் நடந்தது.

வரும் டிசம்பர் 12ல் இவர்களின் திருமணம் திருப்பதியில் நடக்க வுள்ளது. 
தொடர்ந்து 16ம் தேதி மாலை 6 மணிக்கு, சென்னை மேயர் ராமநாதன் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க வுள்ளது.

இது குறித்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “நந்தாவும் நானும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். 
சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும் போதே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். 

திருமணத்து க்குப் பின் தொடர்ந்து படங்களில் நடிப்பேன்” என்றார்.
தன் காதலரை கரம் பிடிக்கும் நடிகை சாந்தினி ! தன் காதலரை கரம் பிடிக்கும் நடிகை சாந்தினி ! Reviewed by EThanthi.in on December 10, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close