சின்னத்திரையிலும் ஜொலிக்கவுள்ள விஜய் சேதுபதி !
ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு குறைந்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சின்னத் திரையில் வாய்ப்புதேடி செல்வார்கள்.
ஆனால் தற்போது சினிமாவில் பீஃக்கில் இருக்கும் நடிகர், நடிகைகள் டிவியில் ஷோக்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கமல்ஹாசனின் ‘பிக்பாஸ்’, விஷாலின் ‘நாம் ஒருவர்’ மற்றும்
ஸ்ருதி ஹாசனின் ‘ஹலோ சகோ’ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதியும் சின்னத் திரைக்கு வருகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாக வுள்ள ஒரு வித்தியாச மான ஷோவை விஜய் சேதுபதி நடத்த வுள்ளதாக விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது விஜய் சேதுபதி கையில் ஏராளமான படங்களை வைத்துள்ளார்.
இது மட்டுமின்றி திரைப் படங்கள் தயாரிப்பது, பாடல் எழுதுவது, திரைக்கதை எழுதுவது,
டப்பிங் உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபட்டிரு க்கும் நிலையில் தற்போது டிவி ஷோவிலும் கலந்து கொள்ள விருப்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது.



No comments