EThanthi - பெரியார் பேத்தி கவுசல்யாவுக்கு வாழ்த்துக்கள்: சத்யராஜ் !

Flash News

பெரியார் பேத்தி கவுசல்யாவுக்கு வாழ்த்துக்கள்: சத்யராஜ் !

சாதி வெறியர்கள் முகத்தில் கரியை பூசிய கவுசல்யா- சக்தி தம்பதிய ருக்கு நடிகர் சத்யராஜ் மனமார்ந்த திருமண வாழ்த்து களை தெரிவித் துள்ளார்.
வேறு சாதி இளைஞரான சங்கரை கவுசல்யா திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தின ரால் சங்கர் ஆணவக் கொலை செய்யப் பட்டார். 

இதற்கு காரணமாக இருந்த தனது குடும்பத்தி னருக்கு சட்ட ரீதியாக தண்டனை வாங்கி கொடுத்தார். 

மேலும் சாதியின் கொடுமையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

டிசம்பர் 1 ஆம் தேதி நந்தீஸ்-சுவாதி படுகொலை க்கு எதிராக கண்ட கூட்டம் நடத்தினார். 

இந்நிலையில் கவுசல்யா கோவை வெள்ளலூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரும், 

நிமிர்வு கலையக ஒருங்கிணப் பாளருமான சக்தியை சாதி மறுப்பு மறுமணம் செய்து கொண்டார்.
இவரின் திருமணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வாழ்த்து தெரிவித் திருந்தார். 

இந்நிலையில் இன்று நடிகர் சத்யராஜ் கவுசல்யா- சக்தி தமபதிக்கு திருமண வாழ்த்து தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்ப தாவது 

‘சாதி வெறியர்களின் முகத்தில் கரியை அள்ளிப் பூசிய கருஞ் சட்டைப் பெண். பெரியாரின் பேத்தி தோழர் கவுசல்யாவு க்கும், 

பறை அடித்து பகுத்தறிவைப் பரப்பும் பாசமுள்ள தோழன் சக்திக்கும் என்னுடைய மணமார்ந்த வாழ்த்துகள்.

சலிப்பும், ஓய்வும், ஒரு சமூகப் போராளிக்கு தற்கொலை க்குச் சமம் - தந்தை பெரியார். 

கற்பி ஒன்று சேர் புரட்சி செய் - அண்ணல் அம்பேத்கர், பயத்தை விடு இல்லையேல் லட்சியத்தை விடு - பிரபாகரன் 
இந்த மூன்று போராளிகளின் வீரத்தை லட்சியத்தை மனதில் ஏற்றுச் செயல்படும் 

தோழர் கவுசல்யா வுக்கும், சக்திக்கும் என் வாழ்த்துகள்’’ என்று தெரிவித் துள்ளார்.
பெரியார் பேத்தி கவுசல்யாவுக்கு வாழ்த்துக்கள்: சத்யராஜ் ! பெரியார் பேத்தி கவுசல்யாவுக்கு வாழ்த்துக்கள்: சத்யராஜ் ! Reviewed by EThanthi.in on December 10, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close