EThanthi - டிசம்பர் 14 -ல் ’ஜானி’- அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

Flash News

டிசம்பர் 14 -ல் ’ஜானி’- அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்த் கதாநாயக னாக நடித்துள்ள ‘ஜானி’ திரைப்படம் வரும் 14ம் தேதி வெளிவரும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
1990 -ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் கதா நாயகனாக அறிமுக மானவர் நடிகர் பிரசாந்த். 

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் தியாகராஜனின் மகனான இவர், தொடர்ந்து ‘வண்ண வண்ண பூக்கள்’, 

‘செம்பருத்தி’, ‘ஜீன்ஸ்’ உட்பட பல ஹிட் படங்களில் நடித்து கோலிவுட் சினிமாவின் முன்னணி நாயகனாக உயர்ந்தார்.

ஒரு காலக் கட்டத்தில் அஜித், விஜய்யை விட பிரசாந்த் உச்ச நடிகரான இருந்தார். 

எனினும் சமீபமாக வெளியான பல படங்களுக்கு அவருக்கு கைக் கொடுக்காத நிலையில், 

தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் வரிசையி லிருந்து சிறு சறுக்கலை சந்தித்தார்.

இந்த நிலையில் தற்போது, நடிகர் பிரசாந்த் ‘ஜானி’ என்ற படத்தில் மீண்டும் கதாநாயக னாக நடித்துள்ளார். 

இந்த படத்தில் பிரபு, ஆனந்த் ராஜ், அஷுதோஷ் ராணா, தேவதர்ஷினி, சயாஜி ஷிண்டே, ஆத்மா, சஞ்சிதா ஷெட்டி உட்பட பலர் நடித்துள்ளனர்.

வெற்றிச் செல்வன் இயக்கியுள்ள இந்த படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித் துள்ளார். 

இந்தப் படம் 2007ல் இந்தியில் வெளியான ‘ஜானி கடார்’ படத்தின் ரீமேக்காகும் என்பது குறிப்பிடத் தக்கது.

‘ஜானி’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் யூ-டியூபில் வெளியான நிலையில், 
தற்போது இப்படம் படம் இம்மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 

முன்னதாக, 2.0 படம் வெளி வருவதை முன்னிட்டு பல படங்களின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப் பட்டது. 

அதில் ஜானி திரைப்படமும் ஒன்றும் என்பது குறிப்பிடத் தக்கது.
டிசம்பர் 14 -ல் ’ஜானி’- அதிகாரப்பூர்வ அறிவிப்பு ! டிசம்பர் 14 -ல் ’ஜானி’- அதிகாரப்பூர்வ அறிவிப்பு ! Reviewed by EThanthi.in on December 10, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close